திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அரசு பள்ளியின் சுற்று சுவர் இடிந்து விழுந்து சேதம்.

கோபிநாத்

UPDATED: May 6, 2023, 11:51:17 AM

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோமணாம்பட்டியில் மலையடிவாரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு உயர்நிலைப்பள்ளி கட்டப்பட்டது. 

இங்கு கோமணாம்பட்டி, விளாம்பட்டி, சாத்தம்பாடி, ராஜகோபாலபுரம், மதுக்காரம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு முடிந்ததால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. பள்ளியின் மூன்று புறங்களிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது ஒருபுறம் மலையடிவாரம் என்பதால் அப்பகுதியில் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை.

இதனால் மலையடி வாரத்தில் இருந்து வரும் மழை நீர் அடிவாரப் பகுதியான சுற்றுச்சுவர் அமைந்துள்ள பகுதியில் நீர் அதிகளவில் தேங்கியுள்ளது, நீர் வெளியேறுவதற்கு வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக பள்ளியின் கிழக்குப் பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் முற்றிலும் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

அப்பகுதியில் குடியிருப்புகள் ஏதும் இல்லாத காரணத்தினால் நல் வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

VIDEOS

RELATED NEWS

Recommended