Author: THE GREAT INDIA NEWS

Category: district

காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை ஊராட்சியில் கடந்த 10 நாட்களாக எம்ஜிஆர் நகர், கலைஞர் நகர், அம்மன் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு போன்ற பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட மக்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. அதில் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த ராஜம்மாள் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 8 தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். மேலும் ராஜம்மாளின் 45 வயது உடைய மகன் குமார் என்பவருக்கும் வாந்தி பேதி ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந் நிலையில் சிகிச்சை பெற்று வந்த குமார் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். அதேபோல் ஹரிஷ், N.விஜயகுமார், துரை, பாவா ,குமார், சுப்பிரமணி, மலர், கீர்த்தனா, உஷா, சுஜாதா, M.முருகன், ஜீவ தர்ஷினி ,நிஷாந்த், ஜானகிராமன் உள்ளிட்ட 16 நபர்கள் வாந்தி, தொண்டை வலி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து வந்த குடிநீரால் தான் இந்த வயிற்றுப் போக்கு சம்பவம் ஏற்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஊராட்சி மன்ற செயலாளர் தண்ணீரை டெஸ்ட்க்கு அனுப்பியுள்ளதாக தகவல். சுகாதாரத்துறையின் மெத்தன போக்கால் தான் பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியில் உள்ள மக்கள் கொந்தளிப்புடன் கூறுகின்றனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்

Tags:

#இன்றையசெய்திகள்காஞ்சிபுரம் #இன்றையமுக்கியசெய்திகள்காஞ்சிபுரம் #இன்றையசெய்திகள்காஞ்சிபுரம் #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #kanchipuramnews #kanchipuramnewstoday #kanchipuramnewsyesterday #kanchipuramnewsintamil #kanchipuramnewspaper #kanchipuramnewschannel #kanchipuramnewstamiltoday #kanchipuramnewslive #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #kanchipuramnewstodaytamil #kanchipuramflashnewstamil
Comments & Conversations - 0