நீரிழிவு நோயாளிகள் கவனிக்க வேண்டிய விஷயம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் மைதா இதில் உடல் ஆரோக்கியத்திற்கான எந்த சத்துக்களும் இல்லை. மைதாவை சர்க்கரை நோயாளிகள் அதிகமாக பயன்படுத்தினால் அவர்களின் உள் உறுப்புகள் அதிகமாக பாதிப்படைய வாய்ப்புக்கள் உண்டு. எண்ணெயில் பொரித்த உணவுகள் எண்ணெயில் பொரித்த உணவுகளை சர்க்கரை நோயாளிகள் முடிந்தவரை தவிர்ப்பது சிறந்தது. ஐஸ் கிரீம் மற்றும் சொக்லட் சிறுவர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் அதிக சர்க்கரை நிறைந்துள்ள ஐஸ் கிரீம் மற்றும் சொக்லட்டை சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். காப்பி மற்றும் டீ கோப்பி மற்றும் டீ உடலில் குளுகோஸின் அளவை வேகமாக அதிகரிக்க கூடியவை. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை குறைப்பது சிறந்தது. கிழங்கு வகைகள் கிழங்கு வகைகளில் சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளி கிழங்கு போன்ற கிழங்குகளை சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். தவிர்க்க வேண்டிய வேறு உணவுகள் கரும்புச்சாறு, சர்க்கரை, பன்னீர் (பால் கட்டி), மாம்பழம், சீத்தாப்பழம், பலாப்பழம், வாழைப்பழம், குளுக்கோஸ், உலர்ந்த திராட்சை. அளவோடு சாப்பிட வேண்டிய உணவுகள் சோளம், அரிசி உணவுகள், ஓட்ஸ், கேழ்வரகு, கோதுமை, வேர்க்கடலை, பாதம் பருப்பு, முந்திரி பருப்பு. ***அனுபவஸ்தன்***

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended