Author: THE GREAT INDIA NEWS

Category: cinema

வைகுண்டர் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை தயாரிக்கும் வரலாற்று சிறப்புமிக்க திரைப்பத்திற்கு தர்மயுகம் என்று டைட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது , கதை வசனம் மேற்பார்வை கன்னியாகுமரி மாவட்டம் சுவாமித்தோப்பு தலைமைபதி குரு பாலஜனாதிபதி அவர்கள் எழுதியுள்ளார்,M P அழகன் தயாரிப்பு நிர்வாகியாக செயல்படுகிறார. சமிபத்தில் திரையரங்குகளில் வெளியான சில்லாட்ட திரைப்படம் மற்றும் வெளி வர இருக்கும் குட்டிச்சாத்தானுக்கு 5 பொண்டாட்டி , வீரமகன் , அகிலம் நீ ,போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த Crazy Star விஜித் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார் மற்றும் கதாநாயகியாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகை நடிக்க இருக்கிறார், தேனிசை தென்றல் தேவா இசை அமைகிறார் , மேலும் சில்லாட்ட திரைப்படத்தின் இயக்குனர் சிவராகுல் இந்த படத்துக்கு திரைக்கதை எழுதி இயக்குகிறார். ராதா ரவி, கஞ்சா கருப்பு ,நதியா ,சிங்கம் புலி , வையாபுரி , பயில்வான் ரங்கநாதன் , வைகாசி ரவி , முத்துக்காளை , போண்டா மணி , கராத்தே ராஜா , விஜய் கணேஷ் , பிரியா படேல் , சுப்புராஜ் என திரையுலக பட்டாளமே நடிக்கவுள்ளனர் , தமிழகத்தில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட அய்யாவழி பதிகள்,தாங்கல்கள் (கோவில்கள்) மற்றும் லட்சக்கணக்கான பக்தர்களை கொண்ட அய்யா வைகுண்டர் சுவாமிகள் அருளிய புனித நூலான அகிலத்திரட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது , விரைவில் இந்த படத்தின் துவக்கவிழா மற்றும் முதல் கட்ட படபிடிப்பு நடைபெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை செய்தியாளர் அஹ்மத் அஸ்ஜத்.

Tags:

#இன்றையசெய்திகள்உலகம் #இன்றையமுக்கியசெய்திகள்உலகம் #இன்றையதலைப்புச்செய்திகள்உலகம் #indrayaseithigalsrilanka #indrayaseithigal #todaynewssrilanka #worldnewstoday #worldnewsinenglish #worldnewslive #worldnewstodayheadlines #worldnewstoday2022 #worldnewslatest #worldnewslatest #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latestindianewstamil #Tamilnewsdaily #Districtnews #indianewslive #worldnewstamil #worldnews #worldnewsintamiltoday #worldnewstodayintamil
Comments & Conversations - 0