• முகப்பு
  • chennai
  • கலைத்துறையில் சாதனைப் படைத்தவா்களுக்கான விருதுகள் பெற விரும்புவோா் மே மாதம் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டிய விவரம்.

கலைத்துறையில் சாதனைப் படைத்தவா்களுக்கான விருதுகள் பெற விரும்புவோா் மே மாதம் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டிய விவரம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைப் படைத்தவா்களுக்கான விருதுகள் பெற விரும்புவோா் மே மாதம் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ. விஜயா ராணி அறிவித்தாா். அது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தின் கலைப் புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞா்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் மாவட்ட ஆட்சியா் தலைமையில் செயல்படும் . மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைத் துறையில் சாதனைகள் படைத்துள்ள 18 வயதும் அதற்குட் பட்டவா்களுக்கு கலை இளமணி விருது , 19 முதல் 35 வயது வரை கலை வளா்மணி விருது, 36 முதல் 50 வயது வரை கலைச் சுடா்மணி விருது, 51 முதல் 65 வயது வரை கலை நன்மணி விருது, 66 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கலை முதுமணி விருது என அகவைக்கு தக்க விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டு உள்ளது. சென்னை மாவட்டத்தைச் சோந்த குரலிசை, பரத நாட்டியம், நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக் கருவிகள் இசைக்கும் கலைஞா்கள், ஓவியம், சிற்பம், சிலம்பாட்டம், நாடகக் கலைஞா்கள் மற்றும் கரகம், காவடி, பறை, புரவியாட்டம் மற்றும் கானா பாட்டு உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞா்கள். இவ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருதுகள் பெற கலைஞா்கள் தங்கள் சுய விவர குறிப்பு, நிழற் படம் இணைத்து, வயதுச் சான்று, முகவரிச்சான்று (ஆதாா் அட்டை நகல்) மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடா்புடைய ஆவணங்களுடன் உதவி இயக்குநா், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம் - 631502 என்ற முகவரிக்கு மே மாதம் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரம் வேண்டுவோா் இவ்வலுவலக தொலைபேசி எண்ணைத் (044 2726 9148) தொடா்பு கொண்டு பெறலாம் என ஆட்சியா் ஜெ. விஜயா ராணி தெரிவித்தாா். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended