Author: THE GREAT INDIA NEWS

Category: district

புதுச்சேரி திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா சிலை அருகே நடைபெற்றது. திராவிடர் விடுதலை கழக புதுச்சேரி தலைவர் லோகு.ஐய்யப்பன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மற்றும் பல்வேறு சமூக இயக்கத்தினர் கலந்து கொண்டு தனது எதிர்ப்பை தெரிவித்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி அரசு மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்,கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் கேசினோ சூதாட்ட விடுதிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து லோகு.ஐய்யப்பன் கூறும்போது.. புதுச்சேரியின் அழிவிற்கு அச்சாரம் போடும் மோடி அரசின் கை பாவையாக முதலமைச்சர் ரங்கசாமி செயல்பாடுதாகவும் 5ஆயிரம் கோடி ரூபாய் சொத்து உள்ள மின் துறையை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும் இல்லை என்றால் மாநிலம் முழுவதும் பல கட்ட போராட்டங்களை நடத்தப் போவதாக தெரிவித்தார். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

Tags:

#இன்றையசெய்திகள்புதுச்சேரி #இன்றையமுக்கியசெய்திகள்புதுச்சேரி #இன்றையசெய்திகள்புதுச்சேரி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #Tamilnadulatestnews #breakingnewstamil #Todaysnewstamil #Tamillatestnews #Tamilnewslatest #Tamilnewspaper #onlinetamilnews #tamilnews #tamilnewsportal #onlinetamilnewsportal #pondicherynewstodaytamil #puducheryflashnewstamil
Comments & Conversations - 0