• முகப்பு
  • district
  • 65 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி சார்பதிவாளர் கைது.

65 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி சார்பதிவாளர் கைது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மாவட்டம் திருப்போரூர் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு கிராமத்தில் பிரபலமான கிரானைட் நிறுவனத்திற்கு சொந்த மான 5 ஏக்கர் 88 சென்ட் நிலம் அபகரிக்கப் படுவதாக தாம்பரம் பெருநகர காவல் நிலையத்தில் நிலத்தின் உரிமையாளர் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மதுராந்தகத்தை சேர்ந்த மதுரை என்பவர் 1971 ஆம் ஆண்டு இந்த நிலத்தை கிரயம் பெற்றது போல் போலி ஆவணம் தயார் செய்து அந்த ஆவணம் மதுராந்தகத்தில் ஆட்டோவில் செல்லும்போது தொலைந்து விட்டதாக காவல் நிலையத்தில் போய் புகார் அளித்து சான்று பெற்றுள்ளனர், அதை வைத்து திருப்போரூர் சார்பதிவகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த செல்வ சுந்தரி, மூலமாக போலி ஆவணங்களை தயார் செய்து சார்பதிவாளர் அலுவலகம் கொடுத்தது போன்று நகல் ஆவணம் பெற்றுள்ளனர், இதில் , அலுவலகதில் தற்காலிக ஊழியர் காசி உதவியோடு சார்பதிவாளர் செல்வ சுந்தரி, இந்தமுறை கேட்டிற்குதுணை போனதும் தெரிய வந்தது, இந்நிலையில், கடந்த 13 ம் தேதி தாம்பரம் மாநகர தனிப்படை போலீசார் தற்காலிக ஊழியர் காசி, அவரது மருமகன் பிரபாகரன், போலி ஆவணம் எழுதிக் கொண்ட ரஞ்சித்குமார் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், போலி ஆவணத்தை பதிவு செய்த சார்பதிவாளர் செல்வ சுந்தரி, ஏற்கனவே லஞ்ச வழக்கு ஒன்றில் கைதாகி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை சென்னைப் புறநகரில் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த செல்வ சுந்தரியை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

RELATED NEWS

Recommended