• முகப்பு
  • அரசியல்
  • நாமக்கல் மாவட்டம் முழுவதும் கலைஞரின் மார்பளவு சிலையை வைக்க தீர்மானம்

நாமக்கல் மாவட்டம் முழுவதும் கலைஞரின் மார்பளவு சிலையை வைக்க தீர்மானம்

முத்தையா

UPDATED: May 27, 2023, 6:57:51 PM

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் நாமக்கல் தெற்கு நகரத்தில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் மு. கருணாநிதி முழு திரு உருவ சிலையினை நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த ஆண்டு திமுக தலைவர் முதலமைச்சர் தளபதி மு. க. ஸ்டாலின் தலைமையில் திறப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல் நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் மு. கருணாநிதி புகழை பரப்புகின்ற கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் நடத்தப்படும் .

மேலும் வருகின்ற ஜீன் 3 ஆம் தேதி அன்று ஊர்கள் தோரும் ,கிராமங்கள் தோரும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது என்றும் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக ஏகமனதாக தீர்மானிக்கிப்பட்டது. 

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் நாமக்கல் கிழக்கு மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவோம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

எங்கெங்கும் கலைஞர் என்ற அடிப்படையில் கலைஞர் மு. கருணாநிதி முழு உருவச்சிலை , மார்பளவு சிலைகள் மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றிய நகர பேரூர் திமுக சார்பில் அமைப்பதற்கு அரசின் விதிமுறைகளை பின்பற்றி அனுமதி பெற்று சிலை அமைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இளைஞர் அணி சார்பாக சாதனை விளக்க தெருமுனை கூட்டங்களை ஒன்றிய நகர பேரூர்களில் நடத்திடுவோம் என்று தீர்மானிக்கப்பட்டது.

ஆகிய முக்கிய தீர்மானங்கள் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

VIDEOS

RELATED NEWS

Recommended