• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • புஞ்சை புளியம்பட்டி தமிழ் நகரில் உள்ள அருள்மிகு மதிப்பாபூரி அம்மன் கோவில் கோபுரத்தில் இடி விழுந்ததில் கோபுரம் இடிந்து சேதம் மற்றும் நாய், இரண்டு பச்சை கிளி உயிரிழப்பு.

புஞ்சை புளியம்பட்டி தமிழ் நகரில் உள்ள அருள்மிகு மதிப்பாபூரி அம்மன் கோவில் கோபுரத்தில் இடி விழுந்ததில் கோபுரம் இடிந்து சேதம் மற்றும் நாய், இரண்டு பச்சை கிளி உயிரிழப்பு.

மகேஷ் பாண்டியன்

UPDATED: May 8, 2023, 7:52:34 PM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி தமிழ் நகரில் உள்ளது அருள்மிகு மதிப்பாபூரி அம்மன் கோவில் இந்த ஆலயம் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.

ஆலயத்தில் தினந்தோறும் காலை, மாலை நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் . புஞ்சைபுளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

8.5.2023 மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. அப்போது திடீரென்று ஆலய கோபுரத்தில் இடி விழுந்தததில் ஆலய கோபுரம் உச்சியில் வடிவமைக்கப்பட்ட சிலைகள் உடைந்து சிதறியது,

அதுமட்டுமின்றி கீழ் பகுதியில் இருந்த நாய் ஒன்றும் கோபுரத்தில் கூடு கட்டி இருந்த பச்சைக்கிளிகள் இரண்டும் உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். 

இடி விழுந்து தாக்கியதில் கோபுரம் சேதமடைந்தது மற்றும் நாய், கிளிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended