• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மேலப்பாவூரில் சுவரொட்டி சேதப்படுத்தியதால் இரு சமுதாயத்தினர் இடையே பிரச்சனை ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை

மேலப்பாவூரில் சுவரொட்டி சேதப்படுத்தியதால் இரு சமுதாயத்தினர் இடையே பிரச்சனை ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை

ராஜ்குமார்

UPDATED: May 10, 2023, 9:37:29 AM

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலப்பாவூரில் சுவரொட்டி சேதப்படுத்தியதால் இரு சமுதாயத்தினர் இடையே பிரச்சனை ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை நிலவியது.

இது சம்பந்தமாக உயர் அலுவலர்களின் உத்தரவின் பேரில் சுமார் 600 காவலர்கள் பாதுகாப்பு அலுவலுக்கு உட்படுத்தப்பட்டு அமைதி நிலைநாட்ட தீவிர முயற்சி எடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து மூன்று நாட்களாக நடத்தினர்.

பின்பு புளியங்குடி DSP அசோக் மற்றும் சங்கரன்கோவில் DSP சுதிர் ஆகியோர் தலைமையில் இரு சமுதாயத்தினருக்கும் தனித்தனியே சமாதான கூட்டம் நடைபெற்று சுமூகமான தீர்வு ஏற்பட்டதை தொடரந்து உண்ணாவிரம் முடித்துக்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து 09.05.2023ஆம் தேதி தென்காசி உட்கோட்ட வருவாய் கோட்டாட்சியர் (RDO) அவர்கள் மற்றும் புளியங்குடி DSP  அசோக் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் இருதரப்பினரும் கலந்து கொண்டு கூட்ட முடிவில் எடுக்கப்பட்ட நான்கு தீர்மானங்களையும் ஏற்றுக்கொண்டு அமைதியான சூழ்நிலை நிலவுவதற்கு உறுதுணையாக இருப்பதாக கூறினர்.

இதன் மூலம் தென்காசி காவல்துறை இரு தரப்பினரிடையே சுமூகமான நிலை இல்லாமல் இருந்த மேலப்பாவூர் பகுதியை தங்களுடைய சாதுரியமான நிர்வாக திறமையால் அமைதி நிலவ செய்துள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended