Author: வாசுதேவன்

Category: குற்றம்

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஈச்ச மரம் ஸ்டாப்பிங் என்ற இடத்தில் சுமார் 30 ஆண்டுகளாக இருந்த பழமை வாய்ந்த புளிய மரத்தை வேரோடு எடுத்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதை ஊர் பொதுமக்கள் அறிந்து அங்கு வந்து விசாரித்த போது ஜாப்ரா பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் நேரு உத்தரவின் பேரில் அகற்றப்பட்டது என்று பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவை சேர்ந்த நேருவை தொடர்பு கொண்டு தொலைபேசி வாயிலாக கேட்டதற்கு மரத்தை அப்புறப்படுத்த முறைப்படி ஊராட்சி மன்றம் வாயிலாக அனுமதி வழங்கப்பட்டது என்று ஊர் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

மரத்தை வெட்டி அகற்ற ஊராட்சி மன்ற தலைவர் எப்படி அனுமதி வழங்க முடியும் என்று தெரியவில்லை. கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டால் இந்த விஷயம் எங்களுக்கு தெரியாது என்று முழு.பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்த கதையை கூறுகிறார்.

அதிமுகவைச் சேர்ந்தவர் அந்த இடத்தை வாங்கியதாகவும் அதற்காக எதிரில் இடையூறாக. இருந்த அந்த மரத்தை அப்புறப்படுத்திய தகவல் பேரிடியாக இறங்கியுள்ளது.

அதுவும் வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல ஊராட்சி மன்ற தலைவர் ஒத்துழைப்புடன் இந்த அதிகார துஷ்பிரயோகம் அரங்கேறியுள்ளது. திமுக ஆட்சியில் அதிமுகவினர்அராஜகம் செய்து கொண்டு வருகின்றனர் என்பதற்கு இந்த உதாரணமே போதும்.

இதைபார்த்த கிராம பொதுமக்கள் அதிர்ச்சியில். உறைந்து போயுள்ளனர். இந்த பிரச்சினையில் உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்களின் சார்பிலும், சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கையாக தெரிவித்துள்ளனர்.

போகட்டும் தவறு செய்பவர்களுக்கு தண்டனை எதிர்த்தால் தான் மற்றவர்கள் இந்த தவறை வருங்காலங்களில் செய்யாமல் தடுக்கலாம் இப்பொழுதே எதையும் கண்டும் காணாமல் விட்டு விட்டால் சிறிய குற்றங்கள் நாளை பெரிய குற்றங்களாக மாறுவதற்கு வழிவகை ஏற்படும் என்பது நிதர்சன உண்மை. 

Tags:

#வேலூர்செய்திகள் , #vellorenewstoday , #vellorenewspaper , #velloredistrictnews , #vellorelatestnews , #velloretodaynews , #vellorelocalnews, #TheGreatIndiaNews , #Tginews , #news, #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnewstamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #news today , #people struggle , #இன்றையசெய்திகள்வேலூர் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalvellore , #todaynewsvellore , #tamilnadunews ,
Comments & Conversations - 0