• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மயிலாடுதுறையில் உள்ள பிரபலமான ஐயங்கார் பேக்கரியில் பிறந்தநாளுக்கு வாங்கிய ஐஸ் கிரீம் கேக்கில் புழு நெளிந்து ஓடியதால் வாடிக்கையாளர் அதிர்ச்சி.

மயிலாடுதுறையில் உள்ள பிரபலமான ஐயங்கார் பேக்கரியில் பிறந்தநாளுக்கு வாங்கிய ஐஸ் கிரீம் கேக்கில் புழு நெளிந்து ஓடியதால் வாடிக்கையாளர் அதிர்ச்சி.

தாரிக்கனி

UPDATED: Sep 26, 2023, 7:31:08 PM

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஐயங்கார் பேக்கரி என்ற பிரபல தனியார் பேக்கரி நிறுவனம் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வருகிறது.

மயிலாடுதுறை மணிக்கூண்டு அருகே உள்ள மாயவரம் ஐயங்கார் பேக்கரியில் கடந்த 23ஆம் தேதி சீர்காழி தாலுக்கா நாங்கூர் பகுதியை சேர்ந்த ஷோபனா என்பவர் தனது மகன் பிறந்தநாளுக்காக ப்ரஸ் கிரீம் கேக் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.

அன்று மாலை வீட்டில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். அப்போது பிறந்தநாளுக்கு வந்த அனைவருக்கும் கேக்கை வெட்டி கொடுக்கும் பொழுது அதில் புழு ஒன்று நெளிந்து ஓடியது கண்டு குடும்பத்தினர்’ அதிர்ச்சியடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து கேக் முழுவதையும் பீஸ் பீசாக வெட்டி பார்த்துள்ளனர். பலநாட்கள் கடந்து வீணாகிப் போன தின்பண்டங்களில் இருந்து நூல் வருவது போல் கேக்கில் இருந்து நூல் நூலாக பிரிந்து வந்துள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து ஷோபனா இன்று மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலையிடம் ஐயங்கார் பேக்கரியில் வாங்கிய கேக்கில் புழு இருந்ததைக் கூறி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தார்.

அதனை தொடர்ந்து மயிலாடுதுறை நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சீனிவாசன் பேக்கரி கடைக்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது பிரட், ஸ்நாக்ஸ், குளிர்பானங்கள், கேக் வகைகளில் தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

உடனடியாக அந்த தின்பட்டங்கள், மற்றும் குளிர்பானங்களை கொட்டி உணவு பாதுகாப்புதுறையினர் அழித்தனர். 

தொடர்ந்து தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்ப்பட்டது உறுதிபடுத்தப்பட்டதன் பேரில் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் பரிந்துறை கடிதம் வழங்க உள்ளதாகவும்,

நிறுவனத்தார், நுகர்வோரிடம் அறிக்கை பெறப்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளது என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் கேக்கை சாப்பிடுவதற்கு முன் புழுவை பார்த்ததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended