• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மலேரியாவைப் பரப்பும் கொசுக்களை ஓழிக்க மருந்து தெளிப்பு பணியாளர்களுக்கான பயிர்ச்சி கூட்டம்.

மலேரியாவைப் பரப்பும் கொசுக்களை ஓழிக்க மருந்து தெளிப்பு பணியாளர்களுக்கான பயிர்ச்சி கூட்டம்.

கார்மேகம்

UPDATED: May 27, 2023, 7:47:08 AM

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாரத்தில் ஏர்வாடிதர்ஹா சடமுனியன்வலசை அடஞ்சேரி வாலிநோக்கம் முந்தல் மாரியூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் உள்ள  கிராமங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஓழிக்க வீடுகள் தோரும் கொசுமருந்து தெளிப்பான்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கப் படுகிறது.

அதன்படி மாவட்ட ஆட்சியர் விஷ்னுசந்திரன் உத்தரவுப்படி பரமக்குடி  சுகாதாரத் துறை துனைஇயக்குனர் டாக்டர் இந்திரா அவர்களின் ஆலோசனைப் படி வரும் ஜீன் 1ம் தேதி முதல்கட்ட ஐ ஆர் எஸ் எனப்படும் கொசுமருந்து தெளிப்பு பணி துவங்க உள்ளது.

இந்த கொசு மருந்து தெளிப்பு பணியில் ஈடுபடுவோர்களுக்கான பயிற்சி மற்றும் முன்னேற்பாடு கூட்டம் ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர் அரவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ் பேசும் போது  மருந்து தெளிப்பு பணி நடைபெறும் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளில் உள்ளவர்களுக்கு கொசு மருந்து தெளிக்கும் நாளை முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்.

மேலும் அப்பகுதிகளில் வீடுகள் தோரும் கொசுப் புழு ஓழிப்பு பணி நடைபெற வேண்டும் மருந்து தெளிப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக கடைப் பிடிக்க  வேண்டும் என்று கூரினார்.

இக் கூட்டத்தில் இளநிலை பூச்சியியல்  வல்லுனர்கள் கண்னண் பாலசுப்ரமணியன் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் பூமிநாதன் சுகாதார ஆய்வாளர்கள் செல்லத்துறை ராஜசேகர் பாண்டி சுப்ரமனியன் உள்ளிட்ட கொசு மருந்து தெளிப்புப் பணியில்  ஈடுபடும் சுகாதார களப்பணியாளர்கள்  ஏராளமானோர் பங்கேற்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended