• முகப்பு
  • குன்னலூர் எக்கல் உள்ளிட்ட கிராமங்களுக்கு பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் வழங்காததை கண்டித்து பா?

குன்னலூர் எக்கல் உள்ளிட்ட கிராமங்களுக்கு பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் வழங்காததை கண்டித்து பா?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பாண்டி கடை வீதியில் கடந்த 2020 21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் எக்கல் குன்னலூர் இரு கிராமங்களுக்கும் முழுமையாக இன்சூரன்ஸ் வழங்காததை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் அனைத்து கட்சி சார்பிலும் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏற்றத்தாழ்வு இன்றி பாரபட்சமின்றி முறையாக பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் 2020 21 ஆம் ஆண்டிற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என பாண்டி கடை வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த சாலை மறியல் போராட்டத்தில் சுமார் 2 மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது . தொடர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் மற்றும் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அவர்கள் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் பெயரில் இன்னும் 15 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் கிடைக்க வழிவகை செய்யப்படும் அதற்கான ஏற்பாட்டினை துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் வாங்கி தரப்படும் என வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததன் பெயரில் போராட்டக்குழுவினர் தற்காலிகமாக தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் உடனடியாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என போராட்ட குழுவின் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது மேலும் காலதாமதம் ஏற்பட்டால் மீண்டும் சாலை மறியல் போராட்டம் பெருமளவிற்கு நடைபெறும் என எச்சரித்து இந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது

VIDEOS

RELATED NEWS

Recommended