• முகப்பு
  • district
  • சாலை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் கிடைக்காமல் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள பருத்திச்சேரி கிராமம்…

சாலை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் கிடைக்காமல் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள பருத்திச்சேரி கிராமம்…

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த மணலி ஊராட்சிக்கு உட்பட்ட பருத்திச்சேரி கிராமத்திற்க்கு என கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித அத்தியாவசிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத அரசின் பொறுப்பற்ற அலட்சியபோக்கால் இம்மாவட்டத்தில் இருந்து துண்டிக்கப்பட்ட கிராமமாக இருந்துவருகிறது. இக்கிராமத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் ஜல்லிபரப்பு தார்போடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு ஆட்சியாளர்களும், மக்கள் பிரதிநிதிகளும் கூட்டாக இணைந்து பல லட்ச ரூபாய் ஊழல் செய்தனர்.. இதுகுறித்து பருத்திச்சேரி கிராமத்தினர் கடந்த ஆட்சியலும், தற்போது திமுக ஆட்சியலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலைவசதியின்மையால் பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், இறந்தவர்கள் சடலங்களை தூக்கி செல்ல முடியாமலும், விவசாய பணிக்கு இயந்திரங்கள் மட்டுமன்றி, தீயணைப்புதுறை வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் கிராமத்திற்கு உள்ளே வர முடியாத நிலையால் கடந்த பல ஆண்டுகாலமாக இக்கிராம மக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இதுதவிர குடிநீர் வசதி, சுகாதார வசதி என எந்தவொரு அத்தியாவசிய அடிப்படை வசதிகள் இன்றி காணும் பருத்திச்சேரி கிராமம் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து துண்டிக்கப்பட்ட ஒரு தனி கிராமமாக திகழ்கிறது. இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து பருத்திச்சேரி கிராமத்திற்கு சாலை, குடிநீர் முதலான அத்தியாவசிய அடிப்படை வசதிகளை செய்துதருவதோடு, ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் செய்தியாளர் இளவரசன்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended