• முகப்பு
  • மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி சாகுபடி பாதிப்பு. விரக்தியடைந்த விவசாயிகள் பரு

மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி சாகுபடி பாதிப்பு. விரக்தியடைந்த விவசாயிகள் பரு

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக பருத்தி சாகுபடி பாதித்துள்ளது.கடந்த ஆண்டு பருத்தி குவிண்டாலுக்கு ரூ 7000 வரை விலை போனது. அதற்கு முன்னர் மூன்றாயிரம், நான்காயிரம் என விலை நிர்ணயிக்கப்பட்ட பருத்தி ஒரே ஆண்டில் விலை ஏற்றம் கண்ட நிலையில்,விவசாயிகள் பலர் ஆர்வம் அடைந்து நிகழாண்டில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த தை மாத பட்டதில் பருத்தி விதைக்கப்பட்ட போது பிப்ரவரி மாத மழையில் முளைத்த நிலையிலேயே பருத்தி செடிகள் அழுகி விட்டன.அதனைத் தொடர்ந்து மாசி மாத பட்டத்தில் மீண்டும் பருத்தி சாகுபடி செய்தனர்.  மார்ச் மாதத்திலும் எதிர்பாராத மழை கடந்த மூன்று நாட்களாக பெய்து வருகிறது.குறிப்பாக நேற்று  இரவு திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் இரண்டு செண்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. இந்த நிலையில் திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளான இளவங்கார்குடி, பெரும்புகலுர், வண்டாம்பாளை, நன்னிலம், குடவாசல் எட்டியலூர், அம்மையப்பன் ஆகிய இடங்களில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் மாசி பட்டத்தில் விதைத்து ஓரிரு இலைகள் துளிர்த்து வந்த பருத்தி செடியானது மழையில் அடிபட்டு சேதமடைந்துள்ளது. பருத்தி பயிரிடுவதற்கு ஏக்கர் ஒன்றுக்கு 10,000 வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர். தொடர்ந்து பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் பெய்த மழையின் காரணமாக இரண்டு முறை பருத்தி சாகுபடி செய்து மலையால் முழுவதுமாக பருத்தி பயிர்கள் அழுகி பாதிப்படைந்த நிலையில் செடியின் நிலை கண்ட விவசாயிகள் கவலை அடைந்ததோடு,விரக்தியடைந்து தங்களது பருத்தி வயல்களில் மாடுகளை மேய்க்க தொடங்கியுள்ளனர். நெல்லுக்கு அடுத்தபடியாக பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்க கூடிய பணப்பயிர் இரகமாக பருத்தி இருந்தாலும் இதனை சாகுபடி செய்து கொள்முதலுக்கு அனுப்பும் வரை மிகப் பெரிய சவாலை சந்திக்க வேண்டியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended