• முகப்பு
  • விளையாட்டு
  • இந்திய அளவில் நடைபெற்ற ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற நாமக்கல் மகளிர் பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு வாழ்த்து.

இந்திய அளவில் நடைபெற்ற ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற நாமக்கல் மகளிர் பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு வாழ்த்து.

முத்தையா

UPDATED: May 6, 2023, 8:08:30 AM

இந்திய தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (அகமதாபாத்) சார்பில் ஹேக்கத்தான் போட்டி இந்தியளவில் நடைபெற்றது. 

மண்டல வாரியாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்கள், குஜராத் மாநிலம், காந்தி நகரில் உள்ள இந்திய தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு இறுதிப் போட்டிக்கு அழைக்கப்பட்டனர்.

இதில் கலந்து கொண்ட 170 அணிகளில் 24 சிறந்த அணிகள் தேர்வு செய்யப்பட்டனர். 

இதில் நாமக்கல் மாவட்டம் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில், உயிரியல் மருத்துவத் துறையில் இருந்து இரண்டு அணிகளும், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் இருந்து ஒரு அணியும் தங்கள் படைப்புக்களை பற்றி முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்கள் முன்னிலையில் விளக்கம் அளித்தனர்

மேலும் இவர்கள் தங்கள் படைப்புகளை தயாரிப்புகளாக உற்பத்தி செய்ய தொழில் முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.

இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனையின் தலைவர் மற்றும் செயலாளர் பேராசிரியர் முனைவர் மு. கருணாநிதி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், படைப்புகளை உற்பத்தியாக்கும் முயற்சிக்கு கல்லூரி நிர்வாகம் துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.

இறுதிப் போட்டியில் பங்கு பெற்ற மாணவிகளையும் அவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களையும் மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை மேலாண்மை இயக்குனர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரர், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீ ராகநிதி அர்த்தநாரீஸ்வரன்.

துணைத்தலைவர் டாக்டர் கிருபாநிதி, இயக்குனர் டாக்டர் நிவேதா கிருபாநிதி செயல் இயக்குனர் பேராசிரியர் குப்புசாமி, முதன்மை நிர்வாகி சொக்கலிங்கம், முனைவர் விஜயகுமார், மற்றும் துறைத்தலைவர்கள் அனைவரும் வாழ்த்தினார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended