Author: வாசுதேவன்

Category: மாவட்டச் செய்தி

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வேப்பங்கநேரி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் ஜெயப்பிரகாஷ் (18). இவர் குடியாத்தத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு கணிதம் படித்து வருகின்றார்.

கடந்த 14-ம் தேதி இரவு கே.வி.குப்பம் சாலையில் பைக்கில் சென்றபோது எதிரே வந்த பைக் மோதியதில் ஜெயப்பிரகாஷ் படுகாயம் அடைந்தார்.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:

#வேலூர்செய்திகள் , #vellorenewstoday , #vellorenewspaper , #velloredistrictnews , #accident #vellorelatestnews , #velloretodaynews , #vellorelocalnews, #TheGreatIndiaNews , #Tginews , #news, #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnewstamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #news today , #people struggle , #இன்றையசெய்திகள்வேலூர் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalvellore , #todaynewsvellore , #tamilnadunews ,
Comments & Conversations - 0