• முகப்பு
  • குற்றம்
  • அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி பல கோடிகள் மோசடி செய்த சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள், இதைப் பற்றியான ஒரு சிறிய செய்தி தொகுப்பு தான் இது வாங்க பார்க்கலாம்...

அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி பல கோடிகள் மோசடி செய்த சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள், இதைப் பற்றியான ஒரு சிறிய செய்தி தொகுப்பு தான் இது வாங்க பார்க்கலாம்...

செ.சீனிவாசன்

UPDATED: May 9, 2023, 6:15:33 AM

சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல ஒருத்தன ஏமாற்றனுனா அவன் கிட்ட கருணையை எதிர்பார்க்கக் கூடாது அவனுடைய ஆசையை தூண்டனும் அதான் பேசிக் , என்ற டயலாக் போல பல பேருக்கு இந்த ஆசையை தூண்டி விட்டு தான் பல கோடி ஏமாற்றுகிறார்கள், 

அதுபோல இரண்டு சம்பவம் தான் நாகப்பட்டினத்தில் நடந்திருக்கு, பல வருடங்களாக சிவசக்தி பெனிபிட் ஃபண்ட் என்ற பெயரில , நாகை நகரத்தின் மத்திய பகுதியில சீட்டு கம்பெனி நடத்திவந்த ரவி ஏராளமான திட்டங்களை அறிவிச்சாரு, நிலம் வாங்கவும் விற்கும் திட்டம், நகை சீட்டு கடன் திட்டம், சூப்பர் மார்க்கெட், நகை கடை, ஏல சீட்டு போன்ற பல்வேறு திட்டங்களை மக்களிடையே பரப்பி சீட்டு கம்பெனியில் சீட்டு போட்டவர்களுக்கும் குறைவில்லாமல் வட்டிய அள்ளி கொடுத்திருக்கிறார்.

இதனால நாகை மாவட்டத்தில உள்ளவங்க மட்டும் இல்லாம வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பேர் இவரு சீட்டு கம்பெனியில பணம் போட்டு வட்டி வாங்கிட்டு இருந்திருக்காங்க இதுல பெரிய விஷயம் என்னன்னா டாக்டர், வக்கீல், போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், பிஸ்னஸ் மேன்கள் உள்ளிட்ட மேல் தட்டு மக்கள் முதல் கூலி வேலை செய்யும் நபர்கள் வரை அவரவர்கள் தகுந்தார் போல பணங்களை இன்வெஸ்ட்மென்ட் பண்ணி இருக்காங்க.

திடீர்னு ஒரு நாள் சீட்டு கம்பெனி திவாலாகி பல கோடி மோசடி நடந்து விட்டது. இதனால் ஆத்திரம் கொண்ட பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கம்பெனி ஓனர் ரவிக்கும் அவருடைய குடும்பத்திற்கும் பல நெருக்கடி கொடுத்தாங்க அதை ஒட்டி அவர் மேல பண மோசடி வழக்கும் போலீசில் புகார் செய்யப்பட்டு போடப்பட்டது,

இதனால கைது செய்யப்பட்ட சிட்பண்ட்ஸ் ஓனர் ரவி மற்றும் அவருடைய மகன்கள், ஜெய்சிவா, செந்தில்குமார் ,பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர் ஆனால் பாதிக்கப்பட்டவர்களோ கோர்ட்ல பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டாரு.

இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த ஆள் பலமும் பண பலமும் இருந்த பல பேர் இந்த குரூப்பை மிரட்டி ரவியிடம் இருந்த திருமண மண்டபங்கள், வீடுகள், நிலங்கள் போன்றவற்ற வந்தவரை லாபம் என்று கையகப்படுத்திக் கொண்டாங்க. இதுல கூலி வேலை செஞ்சவங்களும் அப்பாவிகளும் மாட்டிகிட்டாங்க.

இந்த நிலையில்தான் அதே பாணியில நாகையில் அதிக வட்டி தருவதாக கூறி கோடி கணக்கில் பணம் மோசடி செய்த நிலா பே நிறுவனர் தௌசிக் முகமதுவும் கைது செய்யப்பட்டு ஜாமின்ல வெளிய வந்து இருக்காரு. இந்த சம்பவத்தை பற்றியும் கொஞ்சம் விரிவா நம்ம பார்க்கலாம் வாங்க.

நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் தௌசிக் முகமது. இவர் அதே பகுதியில் நிலா பே என்கிற ஈ பைக் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவர் நிறுவனத்தில் நாகை , திருவாரூர், மயிலாடுதுறை உட்பட சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது பிற மதத்தினரும் கோடி கணக்கில் முதலீடு செய்திருந்தனர், இதுல அதிகப்படியா இஸ்லாமியர்கள் தான் முதலீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு பேக்ல ஏர்டெல் சிம் கார்டு எடுத்துக்கொன்டு விற்பனை செய்தவரும் கடைகளுக்கு சிம் போட்ட வரும், சாதாரணமா இருந்தவரும் தான் இந்த தௌசிக் முகமது, இவரும் அதே சதுரங்க வேட்டை பட பாணியில, ஒருத்தன ஏமாற்றனுனா அவன் கிட்ட கருணையை எதிர்பார்க்கக் கூடாது அவனுடைய ஆசையை தூண்டனும் னு அளவுக்கு மீறி வட்டி தருவதாக சொல்லவும், இவரை தேடி வெளிநாட்டு பணங்கள் வந்து குவிய தொடங்கியிருக்கு.

வெகு விரைவில் கோடீஸ்வரர் ஆன முகமது செல்வத்துல கோளிச்சிட்டு இருந்திருக்காரு, இவருடைய சகோதரர் பெயரில திருப்பூண்டி பகுதியில் அல்ஃபலா என்ற பெயரில் தனியார் பள்ளிக்கூடமும், உறவினர்கள் பெயரில் ஏராளமான சொத்துக்களும் குவிக்கப்பட்டிருக்கு.

இந்த நிலையில் தான் இவருடைய சீட்டு கம்பெனியில வெளிநாட்டில் வேலை செய்யும் இஸ்லாமியர்களின் மனைவிகள் ஏராளமானோர் பணம் போட்டு இருக்காங்க, இந்நிலையில் தான் இந்த நிலா பே நிறுவனமும் உரிய நேரத்தில் முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கவில்லை என தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த சாஜிதா என்ற பெண்ணும், முதலீடு செய்தவர்கள் சிலரும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தனர்.

இது சம்பந்தமாக  டிஎஸ்பி பழனிசாமி தலைமையில இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சீட்டு கம்பெனி நடத்தி வந்தவர்களை கைது பண்ணி இருக்காங்க.

சிவசக்தி சீட்டு கம்பெனி திவாலான சில மாதங்களிலேயே இந்த நிலா பே கம்பெனியும் மோசடியில் ஈடுபட்டு இருக்கு.

இந்த நிலா பே சீட்டு கம்பெனி ஓனர் ஒரு இஸ்லாமியர் என்பதால், இஸ்லாமிய வேத முறைப்படி பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனை குற்றம் என்று கூறப்படுவதாகவும், இதனால் இந்த சீட்டு கம்பெனியில பணம் போட்டு ஏமாந்தவங்க வெளியில சொல்ல முடியாம தவிச்சுப் போய் இருப்பதாகவும் சொல்லப்படுது.

இதுல முக்கியமா பல இஸ்லாமிய பெண்கள் தங்களுடைய கணவருக்கு தெரியாமலே வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்தையும், தங்களுடைய நகைகளையும் விற்று இந்த சீட்டு கம்பெனியில் பணம் போட்டு ஏமாந்து இருக்காங்க.

இதனைத் தொடர்ந்து நிலா பே நிறுவனத்தின் உரிமையாளர் தௌசிக் முஹமதையும், அவரோடு கூட இதில் சம்பந்தப்பட்ட கூத்தூர் பகுதியை சேர்ந்த முகமது ரிபாய்தின் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது வெளியில பெயில்ல வந்திருக்கும் இவர்கள் , சில நபர்களுக்கு பண பட்டுவாடாவும் செய்து வராங்க, சுமார் 1000 கோடிக்கு மேல் பண மோசடி செய்துள்ளதாக தெரிய வந்த நிலையில் அவரை கைது செய்யக் கூடாது அவருடைய ஆதரவாளர்கள் என எஸ்பி அலுவலகத்தில் முதலீடு மற்றும் பங்குதாரர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பும் ஏற்பட்ட கொடுமை நம்ம நாகப்பட்டினத்தில் தான் நடந்திருக்கு.

இந்த மாதிரி சம்பவங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்று பல பேர் குருட்டுத்தனமா கேள்வி கேட்டுக் கொண்டுதான் இருக்கிறாங்க.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அறியாமலேயே....

VIDEOS

RELATED NEWS

Recommended