Author: மாரிமுத்து

Category: அரசியல்

தூத்துக்குடி வட்டாட்சியர் ஆக சில வாரங்களுக்கு முன்பு பிரபாகரன் பொறுப்பேற்றுக் கொண்டார், பொறுப்பேற்ற நாள் முதல் தொடர்ந்து பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்தது, எப்படியும் தூத்துக்குடி வட்டாட்சியராக நான் வந்து விடுவேன் என்று கூறி ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மூலம் தூத்துக்குடி வட்டாட்சியர் ஆக பல மாதங்களாக அதற்கான பணிகளை மேற்கொண்டு வட்டாட்சியர் அக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தூத்துக்குடி வட்டாட்சியர் தூத்துக்குடி மக்களுக்கு தேவையான வாரிசு சான்றிதழ் விதவைச் சான்றிதழ் முதல் திருமணம் சான்றிதழ் தனிபட்டா அடகு கடை நடத்துவதற்கான சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் வட்டாட்சியர் தான் வழங்க வேண்டும்.

இந்த சான்றிதழ்களை தூத்துக்குடி வட்டாட்சியராக பிரபாகரன் பதவி ஏற்ற நாள் முதல் வழங்காமல் தாமதப்படுத்தி வருகிறார், தனக்கு வர வேண்டியது வந்துவிட்டால் உடனடியாக சான்றிதழ் வழங்குகிறார்.

இதனால் தூத்துக்குடி தாலுகாவில் குடியிருக்கும் மக்கள் மிகவும் சிரமப்படும் சூழ்நிலை உள்ளது.

வாரிசு சான்றிதழ், விதவைச் சான்றிதழ், முதல் திருமண சான்றிதழ் போன்ற மூன்று சான்றிதழ்கள் மிகவும் முக்கியமானதாகும்.

இந்த சான்றிதழ்களை வழங்காமல் வட்டாட்சியராக பதவி ஏற்றி உள்ள பிரபாகரன் தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறார், ஆகையால் உடனடியாக தூத்துக்குடி சார் ஆட்சியர் மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் தனிக்கவனம் செலுத்தி புகாருக்கு உள்ளான வட்டாட்சியர் பிரபாகரன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தூத்துக்குடி வட்டாட்சியர் ஆக பதவி ஏற்று ஒரு மாத காலம் ஆவதற்குள் சான்றிதழ்களை தாமதப்படுத்துவதும் தனக்கு வர வேண்டியது வந்தால் சான்றிதழ்களை உடனே வழங்குவதும் தொடர் கதையாகி வருகிறது.

அதுபோல தூத்துக்குடி டவுன் டு கிராம நிர்வாக அலுவலர் பரமேஸ்வரி விதவை சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் 2000 முதல் 3000 ரூபாய் வரை கேட்பதாக புகார் கூறப்படுகிறது.

இந்த புகார் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை தொடர்ந்து புகார்கள் சான்றிதழ் வழங்குவதை தொடர்ந்து வந்தால் இது ஆளும் கட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் உள்ளது.

இதனால் அரசுக்கும் ஆளுங்கட்சிக்கும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் நிலைமை உள்ளது ஆகையால் உடனடியாக இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் எண்ணமாக உள்ளது.

Tags:

#Tuticorinnews, #tuticorinnewstoday , #tuticorinnewspapertoday , #tuticorinnewspaper, #Tuticorinnewschannel , #Tuticorinnewsupdate, #Tuticorinlatestnews, #Tuticorinnews , #Tuticorinnewstodaylive , #Tuticorinlatestnews, #latestnewsintuticorin ,#thegreatindianews , #Tginews , #news #Tamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #neyvelinewstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்தூத்துக்குடி , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltuticorin , #todaynewstuticorin #tamilnadu , #தூத்துக்குடிசெய்திகள்
Comments & Conversations - 0