Author: கண்டி - ஜே. எம். ஹாபீஸ்

Category: இலங்கை

சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு தேசிய சமாதான சபையும், கண்டி மாவட்ட சர்வமத அமைப்பும் இணைந்து கண்டியில் பாடசாலை மாணவர்களுக்கிடையே சித்திரப் போட்டி ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது.

இயற்கைச் சுற்றாடலுடனான கண்டி வாவிக்கரையில் இது நடை பெற்றது. இதில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 60 மாணவர்கள் பங்கு கொண்டனர். தமிழ், சிங்கள, முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த ஆண், பெண் இரு பாலாரும் இதில் பங்கு கொண்டனர்.

இயற்கைச் சுற்றாடலுடன் கூடிய சிறுவர்களது சமாதானக் கருத்தை இனம் காணும் பொருட்டு இது இவ்வாறு நடத்தப்பட்டதாக இதனை ஒழுங்கு செய்த ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


மாணவர்கள் மும்முரமாக சித்திரம் வரைவதில் ஈடுபட்டுள்ளதைப் படத்தில் காணலாம்.

Tags:

#srilankanews ##slnews #thegreatindianews #tgi #slroundnews #sltodayupdate #slnewsforcast #newsfastsl#newslive #srilankantamilnews#இலங்கைசெய்தி#முதன்மைசெய்திகள் #உண்மைசெய்திகள் #வலம்வரும்செய்திகள் #தேசியசெய்திகள் #24updatenews#24மணிநேரசெய்தி
Comments & Conversations - 0