முதல்வரின் பேச்சு – ஓர் ஆய்வுப் பார்வை

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

முதல்வரின் பேச்சு – ஓர் ஆய்வுப் பார்வை “””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””” குழந்தையாக பிறந்து ஒன்றாக விளையாடும் நாம் ஒரு கால கட்டத்தில் வேறுவேறு சூழல்களை சென்று அடைந்து விடுகிறோம். ஒருவன் ஆசிரியன் ஆகிறான். ஒருவன் வணிகன் ஆகிறான். ஒருவன் கலைஞன் ஆகிறான். ஒருவன் கவிஞன் ஆகிறான். ஒருவன் பேச்சாளன் ஆகிறான். ஒருவன் சாமியார் ஆகிறான். ஒருவன் பகுத்தறிவாளர் ஆகிறான். ஒருவன் சீர்திருத்தவாதி ஆகிறான். ஒருவன் சமூக ஆர்வலர் ஆகிறான். ஒருவன் போர் வீரன் ஆகிறான் ஒருவன் அரசியல்வாதி ஆகிறான். ஒருவன் ஆனாந்தாவாகி விடுகிறான் மனிதரின் இத்தனை வகைகளும் அவர்களது சொந்தது இயல்புகளால் உண்டாகின்றன என்பதுதான் இங்கே குறிப்பிடத் தக்கது. முதல்வரின் நேற்றைய பேச்சு அவர் யார் என்பதை நாம் அறிந்துகொள்ளும் வாய்ப்பை நமக்கு கொடுத்து இருக்கிறது. எதை எங்கே எவ்வாறு பேச வேண்டுமோ அதை அங்கே அவ்வாறு பேசி, ‘தான்’ யார் என்பதை நிரூபித்து இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஒரு கோழை போரிடும் வாய்ப்பை நழுவ விடுகிறான். ஒரு வீரன் போரிடும் வாய்ப்புக்காகக் காத்துக் கிடக்கிறான் காரணம், அது அது அவரவர்களின் இயல்புகள்! இவ்வளவு நாட்கள் இவ்வளவு காலங்கள், இத்தனை ஆண்டுகள், ஸ்டாலின் காத்துக் கிடந்து இருக்கிறார் என்பதை அவருடைய நேற்றைய பேச்சு நமக்கு உணர்த்துகிறது. வளமான வாய்ப்புகள் இருந்தும் பதினாறு ஆண்டுகள் காத்திருந்த ராஜராஜனைப் போல! “கருணாநிதியை விட ஆபத்தானவர் ஸ்டாலின்” என்ற அந்த நபரின் தீர்க்கத் தரிசனத்தை நான் பாராட்டுகிறேன். கலைஞர் ஒரு போதும் நேருக்கு நேராக தாக்கியது இல்லை. தாக்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்போது எல்லாம் அதை நகைச்சுவை ஆக்கி விட்டுக் கடந்து போவது கலைஞரின் இயல்பு. ஆனால், ஸ்டாலின் எப்படிப்பட்டவர்? எப்படிப் பட்டவர் என்றால்… அவர் ஸ்டாலின் மட்டுமே அல்ல அவர் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!’ அதாவது, அப்பனுக்கும் அப்பன் அவர்! ஸ்டாலின் என்பவர், பெரியார், அண்ணா கலைஞர் என்ற வரிசையில் வந்த போரிடும் தளபதி! போரிடுவதற்காக, இந்த தமிழ்ச் சமூகத்தின் நலன்களுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு போரிடுவதற்கான வாய்ப்புக்காக காத்திருந்து வந்து சேர்ந்து இருக்கிறார், ஸ்டாலின். நேற்று அவர் நடத்தியது போர் இல்லாமல் வேறு என்ன? 1. இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில்(GTP) தமிழகத்தின் பங்கு 9.22 விழுக்காடு. 2. ஒன்றிய அரசின் நிதி வருவாயில் தமிழகத்தி பங்கு 6 விழுக்காடு 3. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 8.4 விழுக்காடு. 4. ஜவுளித்துறை ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு19.4 விழுக்காடு 5. கார்கள் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 32.5 விழுக்காடு 6. தோல்பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 33 விழுக்காடு. ஆனால் ஒன்றிய அரசின் நிதி வருவாயில் தமிழகத்துக்கு பகிர்ந்து அளிக்கப்படுவது வெறும் 1.21 விழுக்காடு மட்டுமே!!! என்று அவர் கேட்டபோது தனது மண்ணுக்காகத் உயிரவிடத் துணிந்து போரிடும் ஒரு தளபதியாகவே எனக்குத் தோன்றினார்! “ஏன்ய்யா இவ்வளத்தையும் இங்கேருந்து உரிமையோடு எடுத்துக்கிற நீ எங்களுக்கு கிடைக்கக்க வேண்டிய எங்களோட உரிமைய மட்டும் கொடுக்கு மறுக்கிறியே என்னய்யா நீதி இது?” என்று கேட்பது, அதுவும் பொதுவெளியில் வைத்து நேருக்கு நேராகக் கேட்பது இருக்கிறதே இதுதான் உண்மையான போர்! நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்குமாகவும் ஒரு முதல் அமைச்சராக ஸ்டாலின் நடத்திய போர் இது!! “கருணா நிதியை விட ஆபத்தானவர் ஸ்டாலின்” என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன் கலைஞர் கொஞ்சமாக விட்டுக் கொடுப்பார்; கொஞ்சமாக நிதானிப்பார்; கொஞ்சமாக ஒதுங்கிக் கொள்ளுவார்; கொஞ்சமாக திரும்பிக் கொள்வார். அந்த நீக்குப் போக்கெல்லாம் ஸ்டாலினிடம் வேலைக்கு ஆகாது. சண்டை செய்யாமல் வெற்றிக் கிடைக்காது: போரிடாமல் உரிமைகளை வென்று எடுக்க முடியாது என்பதை தெளிவாக உணர்ந்து இருக்கிறார் ஸ்டாலின்! இத்தனைக் காலம் பதுங்கிக் கிடந்ததே பாய்வதற்காகத்தானே! பாய்வதற்கான வாய்ப்புக் கிடைகும்போது தவற விடுவாரா ஸ்டாலின்! நான் நினைக்கிறேன்… கலைஞரே தனது மகனைக் குறைத்து மதிப்பிட்டு விட்டாரோ! கொஞ்சம் முன்பே வந்து இருந்தால் எப்படி இருந்து இருக்குமோ!! வாழ்த்துக்கள் முதல்வர் முத்தவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே!

VIDEOS

RELATED NEWS

Recommended