Author: THE GREAT INDIA NEWS

Category: political

கும்பகோணம் அருகே கபிஸ்தலம் கடைவீதியில் திமுக ஒன்றியம் சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் தாமரைச் செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் சுமதி குணசேகரன் மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமை கழக பேச்சாளர் மதுரை சுந்தர் ராஜன் ஒன்றிய செயலாளர் நாசர் ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் . அப்போது அவர் பேசியபோது பேரறிவாளன் விடுதலைக்கு கருணாநிதி காலத்திலிருந்து எடுத்த முயற்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் வெற்றி கிடைத்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓராண்டில் பல்வேறு சாதனைகள் புரிந்த முதல்வராக திகழ்வதாகவும், வரக்கூடிய நான்கு ஆண்டுகள் மட்டுமல்ல தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் நீடிப்பார். புதிய அரசு கலை கல்லூரிகள் அமைக்கவும், மாவட்ட மருத்துவமனைகள் இரண்டு தரம் உயர்த்தப்பட்டு உள்ளது போன்று பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் அளித்து வருவதாக தெரிவித்தார். மேலும் பாபநாசம் பகுதியில் பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் தொடர்ந்து விவசாயிகளுக்கு நிதி நிலை அறிக்கை துறையை உருவாக்கியவர் தமிழக முதல்வர் தமிழக முதலமைச்சர் எதிர்கட்சியாகவும், ஆளுங்கட்சியாக இருந்தபோதும், கலைஞர் காலத்திலிருந்து எடுத்த முயற்சிக்கு தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் வெற்றி கிடைத்துள்ளதாக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அனைவரும் படிக்க வேண்டும் என்பதில் குறிப்பாக பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அவர் கொண்டுவந்துள்ள சாதனைத் திட்டம் தான் நான் முதல்வர் திட்டம். நீங்கள் படிக்கின்ற காலத்தில் பல்வேறு பயிற்சிகள் பெற வேண்டும் என்பதற்காக உருவாக்கியதுதான் அந்த அடிப்படைத் திட்டம். நான் சில பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொண்டபோது கூட தெரிவித்தேன், மாநிலத்தின் உரிமையாக கல்வி இருந்தால் இன்னும் அதிகமாக கல்வி வளரும் என்று கூறினேன். பள்ளிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் காமராஜர், உயர் கல்விக்கு கருணாநிதி முக்கியத்துவம் கொடுத்தார். இனி வரும் காலம் உயர் கல்விக்கு பொற்காலமாக இருக்கும். என்று தெரிவித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:

#dmkparty #dmkflag #dmkitwing #dmkminister #dmksymbol #dmkponmudi #orandusathanai #kumbakonamtodaynewstamil #perarivalanrelease #perarivalanreleased #perarivalanstory #perarivalanbail #இன்றையசெய்திகள்கும்பகோணம் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #kumbakonamnewstodaytamil #kumbakonamflashnewstamil
Comments & Conversations - 0