Author: THE GREAT INDIA NEWS

Category: pondichery

புதுச்சேரி அடுத்த லிங்கா ரெட்டி பாளையத்தில் அமைந்துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைவிக்கப்பட்ட கரும்புகளை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்புகளை வெட்டி அனுப்புகின்றனர். இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை நஷ்டத்தில் இயங்குவதாக காரணம் காட்டி மூடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 2016- 2017 -2018 -ஆம் ஆண்டிற்கான நிலுவைத் தொகையான சுமார் 12.50 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் டிபிஆர் செல்வம் மற்றும் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆகியோர் முதலமைச்சர் ரங்கசாமி அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர். அதில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான 12.50 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் ,மூடப்பட்டுள்ள சர்க்கரை ஆலையை உடனடியாக திறக்க வேண்டும், என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி உடனடியாக விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

Tags:

#இன்றையசெய்திகள்புதுச்சேரி #இன்றையமுக்கியசெய்திகள்புதுச்சேரி #இன்றையசெய்திகள்புதுச்சேரி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #Tamilnadulatestnews #breakingnewstamil #Todaysnewstamil #Tamillatestnews #Tamilnewslatest #Tamilnewspaper #onlinetamilnews #tamilnews #tamilnewsportal #onlinetamilnewsportal #pondicherynewstodaytamil #puducheryflashnewstamil #cmrangasamy #pondicheryrangasamy
Comments & Conversations - 0