• முகப்பு
  • pondichery
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து திட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து திட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சி நிறுவனத்தின் 24வது இயக்குநர்கள் குழு கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தலைமைச்செயலர் ராஜீவ் வர்மா, புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி தலைமை செயலர் அதிகாரி அருண், ஆட்சியர் வல்லவன், என்பிசிசி நிறுவன தலைமை பொதுமேலாளர் ராவ் மற்றும் பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி இத்திட்டத்தில் ரூ. 300 கோடி மதிப்புள்ள பணிகளை என்பிசிசி நிறுவனம் செய்கிறது. அதன்படி, குபேர் மார்க்கெட் பகுதியில் 50 ஆயிரம் சதுர அடியில் வணிக கடைகள் அமைப்பது, கிழக்கு கடற்கரைச்சாலையில் புறநகர் பேருந்து நிலையம் , 25 ஆயிரம் சதுர அடியில் வணிக இடங்கள் கொண்ட நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும். தாவரவியல் பூங்கா, சுதேசி மில் வளாகத்தில் உள்ள நகர்புற வனப்பகுதியில் சுற்றுச்சூழல் சுற்றுலா அமைப்பது, பெரிய வாய்க்காலை மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கு சீரமைப்பது. உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செய்யப்பட உள்ளது இந்த பணிகள் குறித்த ஸ்மார்ட்சிட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை செய்தார். புதுச்சேரி செய்தியாளர் சக்திவேல்.பா.

VIDEOS

RELATED NEWS

Recommended