• முகப்பு
  • district
  • சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் அத்துமீறல்கள் பற்றி புகார் தெரிவிக்கலாம் - தமிழக அரசு

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் அத்துமீறல்கள் பற்றி புகார் தெரிவிக்கலாம் - தமிழக அரசு

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை பற்றி இந்து அறநிலையத்துறையின் சார்பில் பொது அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் அத்துமீறல்கள் பற்றி வருகின்ற 20 ஆம் தேதி 21 ஆம் தேதி கடலூர் இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலகத்தில் நேரடியாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளனர் , இதனால் சிதம்பரம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பல்வேறு புகார்கள் காரணமாக தமிழக அரசு அறநிலையத் துறையின் சார்பாக ஒரு குழு ஒன்றை அமைத்தது . அந்த குழுவில் மொத்தம் 6 பேர் உள்ளனர் இவர்கள் அனைவரும் சென்ற ஏழாம் தேதி எட்டாம் தேதி தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவினர், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆய்வு செய்ய வந்தனர் . ஆனால் அவர்களுக்கு சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள தீட்சதர்கள் கணக்கு வழக்குகளை காண்பிக்க முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட்டில் ஆர்டர் வாங்கி விட்டு வாருங்கள் என்றும் கூறிவிட்டுச் சென்றனர். எங்களை கட்டுப்படுத்துவதற்கு அறநிலையத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. தமிழக அரசு எங்கள் அதிகாரத்தில் தலையிடுவதற்கு அனுமதி இல்லை என்றும் தீட்சிதர்கள் சார்பில் கூறப்பட்டது . இதனால் அறநிலையத்துறையின் சார்பில் வந்த அதிகாரிகள் திரும்பி சென்றனர் . இதன் நடுவே தற்பொழுது அறநிலையத்துறையின் சார்பில் ஒரு பொது அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர் 2014 முதல் 2021 வரை நடைபெற்ற ஊழல்கள் நடராஜர் ஆலயத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் புராதான சின்னங்களை இடித்துவிட்டு பூங்கா அமைத்து இது தொடர்பாக ஆலோசனை பொதுமக்கள் சார்பில் கேட்கப்படுகிறது . கம்யூனிஸ்ட் கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் தமிழ் அமைப்புகள் தெய்வீக பேரவைகள் இவைகள் அனைத்தும் நடைபெற்ற ஊழலை பற்றி புகார் மனுக்களை அறநிலையத்துறையின் வசம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது . பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் நேரில் ஆஜராகி தெரிவிக்கலாம் , மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது . சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தீட்சிதர்கள் மீது பல்வேறு வகையான வழக்குகள் காவல் துறையின் சார்பில் பதிவு உள்ளது 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை சட்டமும் 3 தீட்சிதர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது . ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.

VIDEOS

RELATED NEWS

Recommended