Author: THE GREAT INDIA NEWS

Category:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி உள்ளிட்டவை தமிழக அரசு ஆணையின்படி அரசு மருத்துவக்கல்லூரியாக மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. தற்போது இந்த கல்லூரி கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற பெயரோடு இயங்கி வரும் நிலையில், இந்த கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே அரசு கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காம் ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் 4 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும், அரசு கல்லூரிகளைப் போன்று அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே மாதிரியான கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தியும் இக்கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 11 தினங்களாக தினமும் மாலை நேரங்களில் மட்டும் கல்லூரி வாயில் முன்பு போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள், இன்று முதல் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று வகுப்புகளை புறக்கணித்த சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள கார் ஷெட்டில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரியான இங்கு இரு வேறான கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்தும், இந்த கட்டண விகிதத்தை மாற்றி ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க வலியுறுத்தியும் மாணவ, மாணவிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி கூறிய மருத்துவ மாணவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கட்டணம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் தவறானவை. நீதிமன்ற உத்தரவுப்படிதான் கல்விக் கட்டணம் குறைக்கப்பட்டது. அப்போது போராட்டம் நடத்தியபோது அரசு கட்டணமே வசூலிப்பதற்கு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலினும் ஆதரவு தெரிவித்து இருந்தார். எனவே அரசாணை எண் 45ன்படி பல்கலைக்கழகத்தில் தங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், தற்போது நடத்தி வரும் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டு வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், தங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் எனவும் மாணவர்கள் தெரிவித்தனர். கடலூர் செய்தியாளர் சண்முகம். இன்றைய செய்திகள் சிதம்பரம் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Chidambaram news,breaking Cudaloore news,latest chidambaram news,

Tags:

Comments & Conversations - 0