• முகப்பு
  • education
  • சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு A+ சான்றிதழ் !!!

சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு A+ சான்றிதழ் !!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் , மெடிக்கல் , ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள், கலை இசைக்கல்லூரி போன்ற துறைகள் இப்பல்கலைக்கழகத்தில் இயங்கி வருகிறது. பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட தொண்ணூற்றி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது அடுத்தவருடம் நூறாவது ஆண்டை கொண்டாடஉள்ளது. டெல்லியில் இருந்து வந்திருந்த NAAC தரப் பல்கலைக்கழகதினர் மூன்று நாட்களாக அனைத்து பிரிவுகளையும் ஆராய்ந்து பார்த்ததில் பல்கலைக்கழகத்திற்கு A+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் வரையில் பல்கலைக்கழகம் A சான்றிதழ் பெற்றிருந்தது தற்பொழுது அண்ணாமலை பல்கலைகழகம் இந்திய அளவில் A+ சான்றிதழ் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று துணைவேந்தர் கூறினார். இந்த வெற்றிக்கு காரணம் பல்கலைக்கழக பணியாளர்களின் கடின உழைப்பாலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சக பணியாளர்களுக்கு 4க்கு 3.38 CGPA மதிப்பெண் பெற்றதால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு A+ விருது வழங்கப்படுவதாக டெல்லியில் இருந்து வந்திருந்த நிபுணர்கள் குழு இன்று அறிவித்துள்ளது. இதனால் பல்கலைக்கழக பணியாளர்கள் பதிவாளர்கள் துணைவேந்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய அளவில் அண்ணாமலை பல்கலைகழகம் ஒரு சிறந்த பல்கலைக்கழகமாக உள்ளது என்று யூஜிசி அறிவித்துள்ளது. ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் பி. சண்முகம்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended