• முகப்பு
  • crime
  • செங்கல்பட்டு சட்டக்கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி தற்கொலையில் மர்மம் ?

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி தற்கொலையில் மர்மம் ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் மாவட்டம் புதூர் பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் மகள் கவிப்பிரியா என்பவர் செங்கல்பட்டில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 5 வருட பி ஏ எல் எல் பி பாடப் பிரிவின் இரண்டாம் ஆண்டு படித்து  படித்து வந்தார். சிவப்பிரகாசம் புதூரில் விவசாயக் கூலியாக வேலை பார்த்து வருகிறார்.இவரது மகள் கவிப்பிரியா பத்தாம் வகுப்புவரை புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்துள்ளார். 11 மற்றும் 12 ஆம் வகுப்பை திருத்துறைப்பூண்டி அன்னை தெரசா அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றுள்ளார். சிறுவயது முதல் கல்வியில் சிறந்து விளங்கிய கவிப்பிரியா தான் கொண்டிருந்த  இலக்கான வழக்கறிஞர் படிப்பிற்காக செங்கல்பட்டு அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்து கல்லூரி நிர்வாகத்தின் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். சிவ  பிரகாசத்தின் மூத்த மகன் சிவபாலன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவரது கடைசி மகள் கிரிஜா 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி கவிப்பிரியா தற்கொலைக்கு முயன்றதாக கல்லூரி நிர்வாகத்தில் இருந்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து செங்கல்பட்டு சென்று செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவிப்ரியாவை பார்த்த தந்தை சிவப்பிரகாசம் மற்றும் அண்ணன் சிவபாலன் ஆகியோர் கவிப்பிரியாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து மே ஒன்றாம் தேதி இரவு கவி பிரியாவின் உடலை உடற்கூறாய்வு க்குப் பின்னர் காவல்துறையினர் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.அதன்பிறகு கவிப்பிரியாவின் உடல் திருவாரூர் மாவட்டம் புதூர் கிராமத்திற்கு கொண்டு வரப்ப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து கவிப்பிரியாவின் தந்தை சிவப்பிரகாசம் கூறுகையில் தங்களது மகளின் தற்கொலைக்கு காரணம் அவரது அறை தோழிகள்தான் என்றும் மேலும் விடுதி காப்பாளர் சுபஸ்ரீ மற்றும் கவிப்பிரியாவின் அறைத் தோழியான மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவியும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும்  காவல்த்துறையினர் சந்தேக மரணம் என்று மட்டுமே வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். சம்பவத்தன்று மதியம் தனது மகள் தன்னுடன் பேசியதாகவும் வீட்டிற்கு வருவதாகவும் தெரிவித்ததாகவும் பேருந்து நிலையம் வரை வந்தவரை அவரது அறை தோழிகள் பேசி தேர்வு முடிந்து செல்லலாம் என்று வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகவும்,அன்று இரவுதான் தனது மகள் தற்கொலைக்கு முயன்றதாக தனக்கு தகவல் வந்ததாகவும் தெரிவித்தார்.  மேலும் ராக்கிங் கொடுமையால் தான் தனது மகள் இறந்துள்ளதாகவும்,எனவே உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தனது மகளுக்கு உரிய நீதி கிடைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். திருவாரூர் செய்தியாளர் இளவரசன். இன்றைய செய்திகள் திருவாரூர் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Crime news,thiruvarur flash news,thiruvarur latest news tamil,thiruvarur today news tamil,Parents allege mystery surrounding second-year student suicide at Chengalpattu Law College

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended