• முகப்பு
  • india
  • தொகுப்பு ஊதிய மாற்று திறனாளிகளுக்கான மத்திய அரசு முக்கிய அறிவிப்பு.

தொகுப்பு ஊதிய மாற்று திறனாளிகளுக்கான மத்திய அரசு முக்கிய அறிவிப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சர்வசிக் ஷா அபியான், ராஷ்டிரிய மத்யமிக் சிக்ஷா, ஆசிரியர் கல்விதிட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் புதியதிட்டம் செயல் படுத்தப் பட்டது. தரமானக்கல்வி, டிஜிட்டல் கல்வி, பள்ளிகட்டமைப்பை வலுப்படுத்துதல், பெண்கல்வி, திறன் மேம்பாடு, விளையாட்டு, கல்வியில் சமநிலை ஆகியவற்றுக்கு சமக்ர சிக்ஷா திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. சமக்ரசிக்ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் மாற்றுதிறனாளிகள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சமக்ர சிக்‌ஷாவில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் அறிவித்துள்ளார். மத்திய அரசு பள்ளிக் கல்வியில் சமக்ர சிக்ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. பணி நிரந்தரம் செய்ய ஏதுவாக 2 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளின் விவரங்களை வரும் 24-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க CEO-க்களுக்கு, சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி

VIDEOS

RELATED NEWS

Recommended