• முகப்பு
  • district
  • பெரம்பலூர் அருகே சாமி ஊர்வலத்தில் ஜாதி கலவரம்.

பெரம்பலூர் அருகே சாமி ஊர்வலத்தில் ஜாதி கலவரம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடலூர் மேற்கு கிராமத்தில் இந்து தேவேந்திர குல வேளாளர் மக்கள் வணங்கும் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் வழிபாடு மற்றும் திருவிழா நடத்துவதற்கு மாற்று சமூகத்தை சார்ந்தவர்கள் பல ஆண்டுகளாகவே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மேலும் பொது தார் சாலை வழியாக தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் மட்டும் ஊர்வலமாக செல்லக்கூடாது என்று மாற்று சமூகத்தினர் கூறியதாகவும். மீறி வந்தால் கலவரம் செய்வோம் என வெளிப்படையாகவே கூறி மிரட்டல் விடுத்துள்ளதாகவும், இந்த நிலையில் மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் காவல்துறைக்கு தேவேந்திரகுல வேளாளர் மக்கள் ஒன்று சேர்ந்து மனு கொடுத்தனர். நிரந்தரமாக கோவில் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர், ஆனால் காவல்துறை அதிகாரிகள் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் விழாவில் கலந்து கொள்ள அனுமதி மறுப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அதனை எதிர்த்து தமிழ் மக்கள் முன்னேற்றக் கழக வழக்கறிஞர் கழக பொதுச் செயலாளர் தலைமையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜான்பாண்டின் கலந்து கொள்ளவும் விழா நடத்தவும் அனுமதி பெற்றனர். திட்டமிட்டபடி திருவிழா 19-6-22 அன்று ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் திருவிழாவில் ஜான் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது . அன்று மாற்று சமூகத்தினரால் சாமி ஊர்வலத்தில் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதனை காவல்துறை , வருவாய் துறை , நீதிமன்ற என யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும். காவல்துறையினர் மாற்று சமூகத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, தமிழக அரசு மற்றும் காவல் துறை சாதி கலவரம் செய்யும் நோக்கத்தில் செயல்படுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் , இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் , ஆனால் பெரம்பலூர் காவல் துறையினர் அவ்வாறு செய்யவில்லை எனவும், காவல்துறை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்திருந்தால் உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி பாதுகாப்பு கொடுத்து இருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது . எனவே சாதி கலவரம் செய்யும் நோக்கத்தில் செயல்படுபவர்கள் மீதும், உடந்தையாக செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி கழக வழக்கறிஞர் வீரகுமார் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம மனு கொடுத்துள்ளனர். பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்.

VIDEOS

RELATED NEWS

Recommended