Author: THE GREAT INDIA NEWS

Category: crime

தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தபடும் என தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் கானல் நீராகி , அரசு மதுபான விற்பனை கூடிக்கொண்டே செல்கின்றது. மதுவுக்கு அடிமையாகிய பலர் அதிலிருந்து விடுபடாமல் மேலும் மேலும் போதையை ஏற்றி கொள்ள கஞ்சாவை நாடுகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பல சமூக விரோதிகள் தானும் கெட்டு மற்றவர்களையும் கஞ்சா புகைக்க வைத்து அடிமைகளாக மாற்றி வருகின்றனர். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் சீரழிகின்றனர். தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் பாண்டீஸ்வரன் ஆகிய இருவரும் ஆந்திர மாநிலத்தில் கஞ்சாவை வாங்கிக்கொண்டு கேரள மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பதற்காக காஞ்சிபுரம் வழியாக சென்றபோது போதை பொருள் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் வசந்திக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் கீழம்பி புறவழி சாலையில் வேகமாக வந்த காரை மடக்கி காவலர்கள் சோதனையிட்டனர். அந்த காரில் 60 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கைப்பற்றி கஞ்சா கடத்தி வந்த மணிகண்டன் , பாண்டீஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

Tags:

#ganja #ganjaleaf #abin #tobacco #drug #drugs #smuggling #smuggler #இன்றையசெய்திகள்காஞ்சிபுரம் #இன்றையமுக்கியசெய்திகள்காஞ்சிபுரம் #இன்றையசெய்திகள்காஞ்சிபுரம் #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #kanchipuramnews #kanchipuramnewstoday #kanchipuramnewsyesterday #kanchipuramnewsintamil #kanchipuramnewspaper #kanchipuramnewschannel #kanchipuramnewstamiltoday #kanchipuramnewslive #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #kanchipuramnewstodaytamil #kanchipuramflashnewstamil
Comments & Conversations - 0