• முகப்பு
  • tamilnadu
  • ஓபிஎஸ்ஸால் ஈபிஎஸ் அணியை கட்சியை விட்டு நீக்க முடியுமா?

ஓபிஎஸ்ஸால் ஈபிஎஸ் அணியை கட்சியை விட்டு நீக்க முடியுமா?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

எடப்பாடி பழனி சாமி உள்ளிட்ட நான்கு பேர் அ.தி.மு.கவிலிருந்து நீக்கம். இ.பி.எஸ் தரப்புக்கு திகில் காட்டிய ஓ.பி.எஸ் தரப்பு. பொதுக் குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனி சாமி தரப்பினர் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனி சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள மனுவில், பொதுக் குழு, செயற்குழு கூட்டத்தில் எடுக்கப் படும் முடிவுகள் கட்சி தொடர்புடையது. இதில் நீதி மன்றங்கள் தலையிட அதிகாரம் இல்லை. பொதுக் குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை நீதி மன்றம் கட்டுப் படுத்தாது என உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. அ.தி.மு க பொதுக்கு ழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யாராவது மேல் முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று ஓ. பன்னீர் செல்வம் தரப்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மதுரையை சேர்ந்த ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர் இன்று மதுரையின் முக்கிய பகுதிகளில் பரபரப்பான போஸ்டர்களை ஒட்டி உள்ளார். அந்த போஸ்டரில் எடப்பாடி பழனி சாமி, கே.பி. முனுசாமி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகியோர் அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அ.தி.மு.கவிற்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதால் மேற்கண்ட 4 பேரும் நீக்கம் செய்யப்படுகிறார்கள். அ.தி.மு கவிலிருந்து நீக்கப்பட்ட நால்வரிடமும், அ.தி.மு.க கழகத் தோழர்கள் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கூறப் பட்டு உள்ளது. சர்ச்சைக் குரிய வகையில் அந்த போஸ்டரில் இவ்வாறு எழுதப் பட்டு உள்ளது. இந்த போஸ்ட்டரை மிசாசெந்தில் என்பவர் மதுரை முழுக்க ஒட்டியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி வெற்றி செல்வம்.

VIDEOS

RELATED NEWS

Recommended