• முகப்பு
  • district
  • கும்பகோணத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல் நிலைய எல்லைகள் மறுசீரமைப்பு செய்யப்படும் - ஐஜி !

கும்பகோணத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல் நிலைய எல்லைகள் மறுசீரமைப்பு செய்யப்படும் - ஐஜி !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஐஜி வி பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார், இன்று காலை கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தை ஆய்வு செய்ய வரும் போது, அங்கு காவலர்கள் உடல் நலன் பேண, ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஐஜி பாலகிருஷ்ணன், தமிழகத்தின் மிகப்பெரிய தேரான சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் நாளைய தேரோட்டத்திற்கு, ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு முன்னச்சரிக்கை பணியிலும், ஈடுபடுத்தப்படவுள்ளார்கள் என்றும், கும்பகோணம் உட்கோட்டத்தில், அடிக்கடி ஏற்படும் சாலை மறியல் போராட்டங்களை தடுக்க, காவல் கட்டுப்பாட்டு அறை அதிகரிக்கப்படும். காவல் நிலைய எல்லைகள் ஆய்வு செய்து மறுசீரமைப்பு செய்யப்படும் என்றும் குற்றங்களை தடுக்கவும், குற்றங்கள் நடந்தால், கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் விசாரணை தொடரவும், மாநகர் முழுவதும் 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், இதனை மாநகராட்சியை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைந்து, மாநகரில் உள்ள அனைத்து சிக்னல்களும் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் விரைந்து அப்புறப்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், அரசு சமீபத்தில் அறிவித்துள்ள நகராட்சி, மாநகராட்சிக்காண இருசக்கர வாகன ரோந்து வாகனம் வந்தவுடன் அவையும், மாநகரில் தொடர்ந்து நல்ல நிலையில், சட்டம் ஒழுங்கு பராமரிக்கவும், குற்ற நடவடிக்கைகளை தடுக்கவும் பயன்படும் என்றும் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார் பேட்டியின் போது அவருடன் கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன், மேற்கு காவல் ஆய்வாளர் பேபி ஆகியோர் உடனிருந்தனர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended