• முகப்பு
  • crime
  • ஓடுகின்ற காரின் கண்ணாடியை உடைத்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி.

ஓடுகின்ற காரின் கண்ணாடியை உடைத்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் மாவட்டம் சந்தவேலூர் தர்காமேடு பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் பிரகாஷ். இவர் காஞ்சிபுரம் நகரில் உள்ள டாட்டா ஷோரூமுக்கு வந்து விட்டு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பிள்ளைசத்திரம் மார்க்கமாக சந்தவேலூருக்கு சென்று கொண்டிருந்தார். பிரகாஷின் கார் ராஜகுளம் அருகே செல்லும்போது ஒரே பைக்கில் வந்த 3 வாலிபர்கள் திடீரென காரை வழிமறித்து முன் பக்க கண்ணாடி மற்றும் பின் பக்க கண்ணாடி மீது கருங்கற்களை வீசினர். இதில் நிலைகுலைந்து போன பிரகாஷ் காரை நிறுத்தியபோது பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் கத்தியை எடுத்து பிரகாஷின் கழுத்தில் வைத்து மிரட்டி அவர் சட்டை பையில் வைத்திருந்த 1200 ரூபாய் பணத்தை வழிப்பறி செய்து கொண்டு மின்னல் வேகத்தில் ஒரே பைக்கில் தப்பினார். மிகவும் அச்சமுற்ற பிரகாஷ் பின்பு சுதாரித்துக் கொண்டு காவல்துறைக்கு தகவல் அளித்தார். அவர் அளித்த தகவலின் பேரில் பல்லவா என்ற தனிப்படையும், டிஎஸ்பி தலைமையில் ஒரு தனிப்படையும், எஸ்பி தலைமையில் ஒரு தனிப்படையும் தப்பி ஓடிய மர்ம நபர்களை செல்போன் மேப் மூலம் தீவிரமாக தேடினர். அவர்கள் 3 பேரும் சிறுவாக்கம் ஏரிக்கரை அருகே சென்றதை கண்டறிந்த காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் ஏரிக்கரை அருகே சுற்றி வளைத்து கைது செய்தது. அதில் காரை பகுதியை சேர்ந்த கொலை குற்றவாளி ரவிசந்திரன், ருத்ரமூர்த்தி மற்றும் ராஜ்குமார் ஆகிய மூன்று பேர்களை கைது செய்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சம்பவம் நடந்த ஒன்னரை மணி நேரத்திற்குள்ளாகவே குற்றவாளிகளை சுற்றிவளைத்து கைது செய்த காவல்துறையினரை காஞ்சிபுரம் கோட்ட காவல் துணை தலைவர் எம்.சண்முகப்பிரியா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் ஆகியோர் பாராட்டி வெகுமதி அளித்தனர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரை வழி மறித்து வழிப்பறி செய்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்

VIDEOS

RELATED NEWS

Recommended