Author: THE GREAT INDIA NEWS

Category: district

தமிழகத்திலும் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பள்ளி,கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை பரவலாக எழுந்து கொண்டே உள்ளது. உலகின் இரண்டாவது உயிர்கொல்லி என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் கூறப்படும் புகையிலையால் ஒவ்வொரு 6 நொடிப்பொழுதிலும் உலகில் ஒரு உயிரழப்பு ஏற்படுகிறது புகை பிடிக்கும் பழக்கத்தால் கேன்சர் உள்ளிட்ட உடல் பாதிப்புகள் ,பக்கவாதம், மனநோய்கள், சிறுநீரக நோய், ஆண்மைக்குறைபாடு, பெண் கருவுறாமை, கர்ப்ப பிரச்சனைகள் ஆகியவை ஏற்படுவதாக ஆய்வறிக்கை கூறுகின்றது எனவே, புகையிலை பழக்கத்தை தடுக்க வேண்டி ஆண்டுதோறும் மே 31ம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலைகளின் ஒழிப்பு தினத்தை வலியுறுத்தி காஞ்சிபுரம் பிரம்மகுமாரிகள் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருந்து புகையிலை விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக் கொண்டு பேரணியாக கரிக்கினில்அமர்ந்தவள் தெரு ,மேட்டு தெரு, மூங்கில் மண்டபம் , வட்டாசியர் அலுவலகம் வழியாக பேருந்து நிலையம் வந்தடைந்தனர். பிரம்மகுமாரிகள் நடத்திய விழிப்புணர்வு பேரணியில் 70 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு போதை பழக்கத்தால் ஏற்படும் தீங்குகளை பொதுமக்களிடம் விளக்கிக் கூறி விழுப்புணர்வு செய்தனர் மேலும் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் நோட்டீஸ்களை அளித்து புகையிலை பழக்கத்திற்கு உட்பட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

Tags:

#smokingawarness #awarness #cigarette #இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday
Comments & Conversations - 0