• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே,கூத்தங்குழி மீனவ கிராமத்தில், வெடிகுண்டு சோதனை! மோப்பநாய் உதவியுடன் நடைபெற்றது!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே,கூத்தங்குழி மீனவ கிராமத்தில், வெடிகுண்டு சோதனை! மோப்பநாய் உதவியுடன் நடைபெற்றது!

மேஷாக்

UPDATED: May 15, 2023, 1:54:59 PM

நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 மீனவக்கிராமங்களில் ஒன்றான கூத்தங்குழி கிராமத்தில், இன்று (மே.15) அதிகாலையில், போலீசார் திடீரென வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டதால், அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

கூத்தங்குழி கிராம மீனவர்கள், இரு கோஷ்டிகளாக செயல்பட்டு, அடிக்கடி தங்களுக்குள் மோதிக்கொள்வதும், அதனை தொடர்ந்து ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்வதும், வழக்கமாக நடைபெற்று வருகிறது.

இது போன்ற நடவடிக்கைகளால், கடந்த சில வருடங்களுக்கு முன்னர், கூத்தங்குழியில் 2 கொலைகளும் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகைய காரணங்களால், கூத்தங்குழியில் உள்ளூர் போலீசார், அடிக்கடி பல்வேறு சோதனைகளில் ஈடுபடுவது வழக்கம்.

சோதனையின்போது கடற்கரையை ஒட்டியுள்ள மணற்பரப்பில், வாளி- வாளியாக வெடி குண்டுகள் பதுக்கி வைத்திருந்ததை, போலீசார் கண்டுபிடித்து, அவற்றை செயலிழக்க செய்வதும், வாடிக்கையான சம்பவம் ஆகிவிட்டது.

தற்போது அங்கு கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்கான கொடியேற்று விழா, அண்மையில் நடைபெற்றது.

கோவில் திருவிழா காலங்களில், சட்டம்- ஒழுங்கை பாதிக்கக்கூடிய வகையில், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்றுவிடாதபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று (மே.15) அதிகாலையில், கூடங்குளம் போலீசார், காவல் ஆய்வாளர் ஜான்பிரிட்டோ,

உதவி ஆய்வாளர் வினுகுமார், சிறப்பு பிரிவு குற்றத்துறை உயர் அலுவலர் லிங்க சேகர் மற்றும் போலீசார், கூத்தங்குழி, பாத்திமா நகர், சுண்டங்காய் உள்ளிட்ட இடங்களில், கடற்கரை மணற்பரப்பில், மோப்ப நாய் உதவியுடன், வெடி குண்டு சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசாரும், உடனிருந்தனர்.

இந்த சோதனையில் முடிவில், வெடிகுண்டு உள்ளிட்ட எந்தவொரு அபாயகரமான பொருட்களும், போலீசார் கைகளில் சிக்கவில்லை ! என, காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

போலீசாரின், இந்த திடீர் சோதனை காரணமாக, கூத்தங்குழி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில், மிகுந்த பரபரப்பு நிலவியது.

VIDEOS

RELATED NEWS

Recommended