சாலை விபத்தில் இறந்த கட்டட மேஸ்திரியின் உடல் சிஎம்சி மருத்துவமனைக்கு தானம்!

வாசுதேவன்

UPDATED: May 17, 2023, 8:48:54 PM

வேலூர் மாவட்டம், வேலூர் ஓல்டு டவுன், உத்திரமாதா கோயில் பின்புறம் உள்ள பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் பிரசாந்த் (31 ). இவர் கட்டட மேஸ்திரி ஆக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கட்டடம் கட்டுவதற்காக வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவுக்கு தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 14ஆம் தேதி சென்று கொண்டிருந்தார்.

அப்போது பிற்பகல் 2 மணி அளவில் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் இவர் படுகாயம் அடைந்தார்.

உடனே அவரை சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு வருவதற்குள் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

இதையடுத்து அவரது உடல் பாகங்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு தானமாக வழங்குவதாக அவரது தாயார் கண்ணகி உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பமிட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார்.

இதையடுத்து அவரது உடல் பாகங்களான இதயம், சென்னை அப்போலோ மருத்துவமனைக்கும், நுரையீரல்கள் சென்னை எம் ஜி எம் மருத்துவமனைக்கும், கல்லீரல் வேலூர் சிஎம்சி மருத்துவமனை ராணிப்பேட்டை கேம்பஸுக்கும், கிட்னி( லெஃப்ட்) சிஎம்சி வேலூர் ராணிப்பேட்டை கேம்பஸ், கிட்னி (ரைட்) மியாட் ஹாஸ்பிடல், எஸ் ஐ எம் எஸ் மருத்துவமனை சென்னைக்கும் தானமாக வழங்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அவரது கண்கள் மற்றும் இதர பாகங்களை யாரும் தேவை இருப்பதாக கூறவில்லை. இதனால் வேலூர் சிஎம்சி மருத்துவமனை இப்படி தானமாக பெற்ற உடல் பாகங்களை பலருக்கு வழங்கி அவர்கள் நீண்ட நாள் வாழ வழிவகை செய்துள்ளது.

இவ்வாறு உடல் தானம் செய்வோர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு பிரிவு அலுவலகத்தை வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended