• முகப்பு
  • political
  • அ.தி.மு.க ராஜ்யசபா எம்.பி பட்டியல் இன்று வெளியாகும் என்ற நிலையில், கட்சிக்குள் சாதிரீதியான மோதல்கள் நிலவுவதாக ரத்தத்தின்ரத்தங்கள் தெரிவிக்கிறார்கள்.

அ.தி.மு.க ராஜ்யசபா எம்.பி பட்டியல் இன்று வெளியாகும் என்ற நிலையில், கட்சிக்குள் சாதிரீதியான மோதல்கள் நிலவுவதாக ரத்தத்தின்ரத்தங்கள் தெரிவிக்கிறார்கள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அ.தி.மு.க வட்டார தகவலின்படி அ.தி.மு.கவின் ஒருஎம்.பியாக ஜெயக்குமார் தேர்வுசெய்யப்படுவது கிட்டத் தட்ட உறுதியாகி விட்டதாம். அவரை எம்.பியாக்க அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தொடக்கத்தில்எதிர்த்தார். ஆனாலும்இவரின் நியமனத்திற்கு மட்டும்சில கண்டிஷன்களுடன் அவர் இறங்கிவந்ததாக கூறப் படுகிறது. அந்த கண்டிஷன் தான் அ.தி.மு.கவில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் படி அ.தி.மு.கவில் இன்னொரு எம்.பி வேட்பாளராக வன்னியர்பிரிவை சேர்ந்த முன்னாள்அமைச்சர் ஒருவரை தேர்வுசெய்ய எடப்பாடி விரும்பினாராம். கடந்ததேர்தலில் இருந்தே வன்னியர்கள்மீது எடப்பாடிக்கு சாப்ட்கார்னர் உள்ளது. கடந்தமுறை வன்னியர்களுக்கு வேலைவாய்ப்பில் 10.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப் படும் என்று எடப்பாடி அறிவித்தார். ஆனால் தேர்தல்நேரத்தில் இது அவருக்குகை கொடுக்கவில்லை. வன்னியர்கள் வாக்கு பெரிதாக அ.தி.மு.கவிற்கு வரவில்லை. அதோடு அ.தி.மு.கவிற்கு ஆதரவாகஇருந்த முக்குலத் தோடு வாக்கும் எதிர்பக்கம் சென்றன. இந்த நிலையில் தான் மீண்டும் வன்னியர்களைஈர்க்கும் வகையில், அப்பிரிவைசேர்ந்த முன்னாள்அமைச்சர் ஒருவருக்கு வாய்ப்புகொடுக்க எடப்பாடி நினைக்கிறாராம். எடப்பாடி இந்தமுடிவில் உடும்புபிடித்தது போல உறுதியாக இருக்கிறராம். ஆனால்இதை ஓ.பி.எஸ் விரும்பவில்லை. வன்னியர் பிரிவில்இருந்து இன்னொரு எம்.பி வருவதை ஓபிஎஸ்விரும்பவில்லை என்கிறார்கள். உங்கள்ஆள் ஜெயக் குமார் எம்.பி ஆகிறார். அதனால் எனக்குஆதரவாக இருக்கும் ஒருவருக்கு எம்.பி பதவி கொடுக்க வேண்டும். கடந்தமுறை வன்னியர்களுக்குசலுகை காட்டியதால் பலனில்லையே. அப்போது பட்ட தெல்லாம் போதாதா? என்று ஓ.பி.எஸ் கேட்டு இருக்கிறாராம். இதனால் முக்குலத்தோர்பிரிவில் இருந்து ஒருவர்வர வேண்டும் என்று பன்னீர் செல்வம் கேட்கிறாராம் முக்குலத்தோர் பிரிவில்இருந்து ஒரு எம்பி வந்தால் தென்மண்டலத்தில் இழந்த செல்வாக்கைமீட்கலாம். முக்குலத்தோர் vs வன்னியர் ஆகிய இரண்டுஜாதி பிரச்சனை மீண்டும் அ.தி.மு.கவில் தலை தூக்கி உள்ளதாம். சசிகலாவிற்கு பதிலடி கொடுக்கவும் வசதியாகஇருக்கும் என்று ஓ. பன்னீர் செல்வம் கருதுகிறாராம். ஏற்கனவே ஒரு எம்.பி வேட்பாளர் டிக் அடிக்கப் பட்டு விட்டாராம். இன்னொருவரையும் இன்றே டிக்அடிக்க முடிவில் இருக்கிறார்கள். பெரும் பாலும் இன்றுஇரவிற்குள் வேட்பாளரைஅறிவிக்கும் திட்டத்தில் அ.தி.மு.க இரட்டைதலைமை இருக்கிறதாம். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended