Author: THE GREAT INDIA NEWS

Category: india

கட்சிமாறி காங்கிரஸுக்கு ஓட்டு போட்ட பாஜக எம்எல்ஏ சஸ்பெண்ட்.. மாநிலங்களவை தேர்தலில் கட்சிமாறி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டுபோட்ட பாஜக எம்எல்ஏ ஷோபா ராணி குஷ்வாகா சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக இருக்கும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று ( 10 ந்தேதி ) நடைபெற்றது. இதில் தமிழ் நாடு, உத்தர பிரதேசம், உத்தர காண்ட், ஆந்திரா, மத்திய பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கார், பஞ்சாப், தெலுங்கானா, ஜார்கண்ட் உள்ளிட்ட 11 மாநிலங்களில் இருந்து 41 உறுப்பினர்கள் போட்டி இன்றி தேர்வாகி செய்யப் பட்டனர். மீதமுள்ள கர்நாடகா, ஹரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 16 இடங்களுக்கான வாக்குப் பதிவு நேற்றுநடை பெற்றது. வாக்குப்பதிவு முடிந்து சரியாக மாலை 5மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியது. இதில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான்மாநிலத்தில் 4 இடங்களுக்கு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3 இடங்களையும், பா.ஜ.க. ஒரு இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றது. அங்கு எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற குதிரை பேரம் நடப்பதாக புகார்எழுந்ததால் , கட்சிகள் தங்கள் எம்.எல்.ஏக்களை சொகுசு விடுதிகளில் தங்க வைத்திருந்தன. இருந்த போதிலும், இருந்து காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் முகுல் வாசினிக், ரன்தீப் சுர்ஜிவாலா, பிரமோத் திவாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ ஷோபா ராணி குஷ்வாகா, காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத்திவாரிக்கு ஆதரவாக வாக்களித்து விட்டார். இதனால் அவர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஷோபா ராணி குஷ்வாகா சஸ்பெண்ட் செய்யப் பட்டார். செய்தியாளர் பா. கணேசன்

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0