• முகப்பு
  • crime
  • செல்போனை பிடுங்கி உடையுங்க என பாஜக எம்எல்ஏ கல்யாண சுந்தரம் உத்தரவு.

செல்போனை பிடுங்கி உடையுங்க என பாஜக எம்எல்ஏ கல்யாண சுந்தரம் உத்தரவு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட கனகசெட்டிகுளம் பகுதியில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டி இருப்பதாக, அத்தொகுதி பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரத்திற்கு புகார் சென்றது. இதையடுத்து சர்வேயர், போலீசார் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் கல்யாணசுந்தரம் எம்எல்ஏ அங்கு சென்றார். அப்போது நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஜோலன் என்பவர், வந்த காரணம் குறித்து கேட்டார். அவரிடம் பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து தனது பாதுகாப்பிற்காக செல்போனில், ஜோலன் வீடியோ எடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த கல்யாணசுந்தரம், செல்போனை பிடுங்கி உடையுங்க என ஆதரவாளர்களுக்கு உத்தரவு போட்டார். உடனே ஜோலன் செல்போனை, ஆதரவாளர்கள் பிடுங்கி தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல். இன்றைய செய்திகள் பாண்டிச்சேரி,இன்றைய முக்கிய செய்திகள் பாண்டிச்சேரி,இன்றைய செய்திகள் பாண்டிச்சேரி மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Pondichery news live tamil,pondichery todays tamil news,BJP MLA Kalyana Sundaram orders to snatch cell phone and break it,bjp mla

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended