• முகப்பு
  • திருவாரூர் நகர மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த புவனப்பிரியா செந்தில் போட்டியின்றி தேர்வு.

திருவாரூர் நகர மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த புவனப்பிரியா செந்தில் போட்டியின்றி தேர்வு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் நகராட்சியில் உள்ள மொத்தம் 30 வார்டுகளில் திமுக 23 வார்டுகளிலும்,காங்கிரஸ் ஒரு வார்டிலும், அதிமுக 3 வார்டுகளிலும், மனிதநேய மக்கள் கட்சி இரண்டு வார்டுகளிலும், சுயேட்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றிருந்தனர். இந்த நிலையில் இன்று நகர் மன்ற தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையருமான பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது.இதில் திருவாரூர் நகர்மன்ற தலைவர் பதவிக்கான திமுக வேட்பாளராக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டிருந்த புவனப்பிரியா செந்தில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். புவனப்பிரியா செந்தில் திமுக சார்பில் 3 வது வார்டில் போட்டியிட்டு 637 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர். இவரது கணவர் செந்தில் திமுக சார்பில் 14 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. செந்தில் முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவராக பதவி வகித்தவர். நகர்மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட புவனப்பிரியா செந்தில் தனது அறையில் உள்ள இருக்கையில் அமர்ந்து கோப்புகளில் முதல் கையெழுத்திட்டார். அவருக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களும் பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended