Author: மகேஷ் பாண்டியன்

Category: குற்றம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் உள்ள கீழ் பவானி அணை நீர்மட்டம் 105அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 2.50 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன அது மட்டுமின்றி 10 லட்சம் மக்கள் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்கின்றது. 

இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக பவானிசாகர் கீழ் பவானி அணையில் ரசாயன கழிவுகள் கலப்படுவதை அடுத்து பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் A.பண்ணாரி நேரில் சென்று பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதிகளில் அரசு அலுவலர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கீழ் அணை நீரில் ரசாயன கழிவுகள் கலப்பதால் மீன்கள் செத்து மிதப்பதாலும் குடிநீரில் ரசாயனம் கலந்த நீர் சென்று வருவதால் அதை மக்கள் பயன்படுத்துவதால் கொடிய நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு ரசாயன கழிவுநீர் அணையில் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது பொதுப்பணி துறையினர் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:

#erodenews, #erodenewstoday , #erodenewspapertoday , #erodenewspaper, #erodenewschannel , #erodenewsupdate, #erodelatestnews, #erodenews , #erodenewstodaylive , #erodelatestnews, #latestnewsinerode ,#TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday, #newstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்ஈரோடு , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalerode , #todaynewserodetamilnadu , #ஈரோடுசெய்திகள்
Comments & Conversations - 0