• முகப்பு
  • இலங்கை
  • தோப்பூர் பிரதேசத்தில் வங்கி செயற்பாடுகள் நவீன மயமாக்கப்பட வேண்டும்.

தோப்பூர் பிரதேசத்தில் வங்கி செயற்பாடுகள் நவீன மயமாக்கப்பட வேண்டும்.

பி.பி.றிவாஸ் மாஸ்டர

UPDATED: Mar 31, 2023, 6:00:22 AM

தோப்பூர் பிரதேசம் அதனை அண்மித்து இருக்கின்ற ஏனைய பிரதேசங்களை விட கல்வி, வர்த்தகம், கலாச்சாரம், அரசியல் வரலாறு போன்ற பல்வேறு காரணிகளில் முன்னணி வகிக்கின்ற ஒரு பிரதேசமாகும்.

இலங்கையின் ஈழப் போராட்டத்திற்கு முன் இப்பிரதேசத்தில் கிராமிய வங்கி மணிமண்டபம் நெசவு சாலை போன்ற பல்வேறு நிர்வாக மையங்கள் அமையப்பெற்ற ஒரு பிரதேசமாகும்.

ஆனால் தற்காலத்தில் இத்தோப்பூர் பிரதேசத்தில் பல்வேறு வகையான நிர்வாக மையங்களின் குறைபாடுகள் நிலவி வருவதை காணக் கூடியதாக இருக்கிறது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தோப்பூர் பிரதேசத்தை பள்ளிக்குடியிருப்பு நல்லூர் பாட்டாளிபுரம் தாயுப் நகர் இலங்கை துறை மகத்துவாரம் சேருவில, 58, 59, கூர் கண்டம் பாலத்தோப்பூர், பட்டித்திடல் போன்ற பல்வேறு பிரதேசங்கங்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகின்றது.

அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த தோப்பூர் பிரதேசத்தில் வங்கி செயற்பாடு ஒரு நவீனமயம் அற்றதாக தற்காலிக கட்டடங்களில் இயங்கி வருவது மன வேதனைக்குரிய ஒன்றாகும்.

இங்கு மக்கள் வங்கி, இலங்கை வங்கி போன்ற அரச வங்கிகள் தற்காலிக கட்டடங்களில் இயங்கி வருவதுடன் விசேடமாக அமானா வங்கியினால் ஏடிஎம் மெஷின் தன்னிக்க இயந்திரம் ஒன்று இணைத்து செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் வாரத்துக்கு வாரம் பழுதடைந்து செல்வதையும் பணம் வேகாமாக தீந்து போவதையும் காணலாம்.

எனவே ஒப்பிட்டு ரீதியாக அதிக அளவு வங்கிகளுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்கள் இதோபூர் பிரதேசத்தில் காணப்படுவதனால் வங்கி செயல்பாடுகளை நிலையான கட்டடங்களில் மிகச்சிறப்பாக  நவீன முறைப்படுத்துவது சம்பந்தப்பட்ட அலுவலர்களின் பொறுப்பாக இருக்கிறது. 

VIDEOS

RELATED NEWS

Recommended