• முகப்பு
  • district
  • 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்.

44வது ஒலிம்பியாட் செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் ஓவியப் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி நா.அங்கையற்கண்ணி அவர்கள் இன்று (19.07.2022) தொடங்கி வைத்து பார்வையிட்டார். 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதுவரை இந்தியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலேயே மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த ஒலிம்பியாட் போட்டியில் உலகின் முதல் நிலை கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 188 நாடுகளை சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஒவ்வொரு நாளும் மக்களுக்கு தெரியும் வண்ணம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த விழிப்புணர்வு பணிகள் அனைத்து துறை அலுவலர்களும் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளம்பர பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினையும், செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற ரோவர் பள்ளியின் தலைசிறந்த 50 ஓவிய மாணவிகள் கலந்து கொண்ட ஓவியப் போட்டியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். முன்னதாக 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து 10 பள்ளி வாகனங்களில் கண்கவரும் வகையில் செஸ் தொடர்பான ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்ட வாகனத்தின் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் வரதராஜன், முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended