• முகப்பு
  • district
  • திருவண்ணாமலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார் .நகர நல அலுவலர் மோகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திமுக நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஆணையாளர் பேசுகையில் தற்போது நாளுக்கு நாள் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இனிவரும் காலங்களில் இது போல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தை பிளாஸ்டிக் மாசில்லா மாவட்டமாக உருவாக்க அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும். மாவட்டத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை சேமித்து வைக்கும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க நகராட்சி பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் மேலும் ரூபாய் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராதமும் தொடர்ந்து விற்பனை செய்யும்பட்சத்தில் சீல் வைக்கும் நடவடிக்கையும் வியாபார உரிமம் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை வியாபாரிகள் அனைவரும் உணர்ந்து தங்கள் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நகராட்சி ஆணையர் பேசினார். இன்று வேங்கிக்கால் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப் படுகிறதா என ஊராட்சிகள் உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் நிகழ்ச்சியில் அனைத்து வியாபார சங்க நிர்வாகிகள், அரிமா சங்க நிர்வாகிகள், திருமண மண்டபம் மற்றும் உணவக உரிமையாளர்கள் ,சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை செய்தியாளர் பாலாஜி. இன்றைய செய்திகள் திருவண்ணாமலை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,thiruvannamalai tamil news today,thiruvannamalai latest tamil mews today

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended