Author: மேலப்பாளையம் ஹஸன்

Category: மாவட்டச் செய்தி

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், கரைச்சுத்து நவ்வலடி ஊராட்சியில், "நம்ம ஊர் சூப்பர்" முகாமின், சிறப்பு நிகழ்வான "மீண்டும் மஞ்சப்பை இயக்கம்", திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன் அறிவுரையின்படி, ஊராட்சி பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்திய நெகிழியை தடைசெய்தல் குறித்த, சிறப்பு விழிப்புணர்வு முகாம், இன்று (மே.31) காலையில், நடைபெற்றது.

முகாமின் போது, விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில், நெகிழி பயன்படுத்துவதை தடைசெய்ய வலியுறுத்தி, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், விநியோகிக்கப்பட்டன.

அத்துடன், அனைத்து வீடுகளுக்கும், மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தரம் பிரித்து வழங்குவதற்கு வசதியாக, குப்பைக் கூடைகளும் வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து, அனைவருக்கும் "மஞ்சப் பைகள்" வழங்கப்பட்டன. "வரக்கூடிய காலங்களில், நெகிழியை (பிளாஸ்டிக்கை) பயன்படுத்துவோர் மீது, 1994 -ஆம் ஆண்டு இயற்றப்பட்ட, ஊராட்சி சட்டத்தின் கீழ், அபராதம் விதிக்கப்படும்.

அத்துடன், வணிக நிறுவனங்களின் உரிமங்கள் ரத்தும் செய்யபடும்!"என்னும் தீர்மானம், ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருப்பது குறித்து, வணிக நிறுவனங்களுக்கு, நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் கரைச்சுத்து நவ்வலடி ஊராட்சி மன்ற தலைவி ராதிகா சரவணகுமார் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சிகளில், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேசுவரன் முன்னிலை வகித்தார்.. வட்டார ஒருங்கிணைப்பாளர் இசைக்குமார், மண்டல துணை வடடார வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஊராட்சி செயலாளர் பிரேமா மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:

#tirunelvelinews #tirunelvelinews , #tirunelvelinewstamil , #tirunelvelinewspaper , #tirunelvelinewschannel , #tirunelvelinewsyesterday , #tirunelvelinewslive , #tirunelvelimavattamnews , #இன்றையசெய்திகள்திருநெல்வேலி , #இன்றையமுக்கியசெய்திகள்திருநெல்வேலி , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltirunelvelitamilnadu , #indrayaseithigaltirunelveli , #todaynewstirunelveli , #TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #plasticawarenessrally #plasticawareness #awareness #tirunelvelitodaynews , #tirunelvelilatestnews , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews
Comments & Conversations - 0