• முகப்பு
  • திருவாருர் புதிய இரயில் நிலையத்தில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி

திருவாருர் புதிய இரயில் நிலையத்தில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாருர் புதிய இரயில் நிலையத்தில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் பாரத் கல்வி நிறுவனத்தின் 100க்கும் மேற்பட்ட பயிற்சி செவிலியர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர். பேரணியானது புதிய இரயில் நிலையத்தில் தொடங்கி நாகை சாலையிலுள்ள வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது. முன்னதாக, உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை முதல் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் தொடங்கி வைத்தனர். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, திருவாரூர் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுகள் இல்லாத, எய்ட்ஸ் நோய் உள்ளவர்களை புறக்கணித்தல் இல்லாத, எய்ட்ஸ் நோய் தொடர்பான இறப்புகள் இல்லாத நிலையை உருவாக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்காமல் பாதுகாப்புடன் உள்ளார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பாதிக்கப்பட்ட நபர்களின் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி உதவித்தொகை, மருத்துவ சிகிச்சைகளுக்காக நிதியுதவியும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற சென்று வருவதற்காக கட்டணமில்லா பேருந்து பயண அட்டையும் அளிக்கப்படுகின்றது. புதிய நோயாளிகள் உருவாகாமல் தடுக்க பொதுமக்கள் மத்தியில் எய்ட்ஸ் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (குடும்பநலம்) மரு.உமாசந்திரசேகர், துணை இயக்குநர்(காசநோய்), மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் மரு.புகழ், மருத்துவ அலுவலர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மரு.அண்ணாமலை வடிவு, மாவட்ட மேற்பார்வையாளர், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு ராமஜெயம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended