• முகப்பு
  • district
  • அரசு மருத்துவமனையில் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு.

அரசு மருத்துவமனையில் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் அண்மையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தொடர்ந்து , தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் , தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் , செயல்முறை விளக்க முகாம்கள் நடைபெற்று வருகிறது . அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் , மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் சிவக்குமார் தலைமையில் , சிறப்பு முகாம் நடைபெற்றது . அப்பொழுது எரிவாயு, மின்சாரம், மின்கசிவு ஆகியவற்றின் மூலம் தீ விபத்துக்கள் ஏற்படுவது, மற்றும் தடுப்பது குறித்தும் , அவற்றை அவசரகால முறையில் தீயை அணைப்பது , மேலும் தீயணைப்பு பணியில் உடனடியாக ஈடுபடும் முறைகள் குறித்தும் செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டது. அதேபோல் நவீன இயந்திரங்களைக் கொண்டு கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கும் நபர்களை மீட்கும் முறை குறித்து நவீன இயந்திரங்களைக் கொண்டு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் உளுந்தூர்பேட்டை அரசு தலைமை மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் நளினி, உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சக்கரவர்த்தி, பரந்தாமன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மருத்துவர்கள் மருத்துவமனை ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended