• முகப்பு
  • pondichery
  • மரம் நடுவோம் மானுடம் காப்போம் விழிப்புணர்வு பிரச்சாரம்.

மரம் நடுவோம் மானுடம் காப்போம் விழிப்புணர்வு பிரச்சாரம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேசிய வன மகோத்சவத்தை முன்னிட்டு, புதுச்சேரி அரசு வனம் மற்றும் வனவிலங்கு துறை சார்பில், புதுச்சேரி மக்களுக்கு மரங்களின் அவசியத்தையும், மரங்கள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், பொதுமக்களுக்கு வனத்துறை சார்பில் இலவச மரக்கன்றுகள் வழங்கியும், வாகன பிரச்சார நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் புதுச்சேரி *அரசு வனம் மற்றும் வனவிலங்கு துறையின் துணை இயக்குனர் குமரவேல் பிரச்சார வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள், இந்நிகழ்வில் புதுச்சேரி சுற்றுச்சூழல் மற்றும் சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் செல்வமணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். மரங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனம் வனத்துறை அலுவலகத்தில் துவங்கி, மறைமலை அடிகள் சாலை, கடலூர் சாலை முதலியார் பேட்டை, இந்திரா காந்தி சிக்னல், தட்டாஞ்சாவடி ராஜீவ்காந்தி சிக்னல், லாஸ்பேட்டை ஏர்போர்ட் ரோடு, கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயில், முத்தியால்பேட்டை, அஜந்தா சிக்னல், வெங்கடா நகர் வனத்துறை பூங்கா, சாரம் அவைத் திடல், பாலாஜி தியேட்டர் பெரியார் சிலை வழியாக நிறைவு பெற்றது. பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

VIDEOS

RELATED NEWS

Recommended